ETV Bharat / state

100 அடி கம்பத்தில் தவெக-வின் பிரம்மாண்ட கொடி..தேனியில் கொண்டாட்டம்! - theni tvk flag - THENI TVK FLAG

tamilaga vetri kazhagam flag: தேனியில் 100 அடி உயர கம்பத்தில், 9 அடி நீளத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பிரம்மாண்டமாக ஏற்றப்பட்டது.

தவெக-வின் பிரமாண்ட கொடி
தவெக-வின் பிரமாண்ட கொடி (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2024, 1:13 PM IST

Updated : Sep 1, 2024, 1:42 PM IST

தேனி: நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கடந்த 22ம் தேதி அறிமுகம் செய்து, கொடிகம்பத்தில் கொடியேற்றி வைத்தார். கருஞ்சிவப்பு, மஞ்சள் என இரு வண்ணங்களிலும் போர் யானைகள் மற்றும் வாகை மலருடன் அக்கொடி வடிவமைக்கப்பட்டிருந்தது.

தேனியில் ஏற்றப்பட்ட த.வெ.க. பிரம்மாண்ட கொடி (Video Credits - ETV Bharat Tamilnadu)

இந்த நிலையில், கட்சிக் கொடியினை தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் தெரியப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் பேரில் தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் லெப்ட் பாண்டி தலைமையில் கட்சி நிர்வாகிகள் கட்சி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

நூறு அடி உயரத்தில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு, 9 அடி நீளத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த கட்சிக்கொடியை அவர்கள் கொடிக் கம்பத்தில் ஏற்றினர். அப்போது அந்த கொடி பிரம்மாண்டமாக காட்சியளித்தது.

இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு கொடியேற்றப்பட்டதை உற்சாகமாக வரவேற்றனர். முன்னதாக தேனி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வாகனத்தில் ஊர்வலமாக வருகை தந்து கொடியேற்றி இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினார்கள்.

100 அடி கொடிக்கம்பத்தில், 9 அடி நீள கொடியுடன் தேனி மாவட்டத்தில் முதன்முதலாக பிரம்மாண்டமாக ஏற்றப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அப்பகுதி மக்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பொத்தேரி கஞ்சா விவகாரம்; 11 மாணவர்கள் ஜாமீனில் விடுவிப்பு.. 3 பேருக்கு ஜெயில்!

Last Updated : Sep 1, 2024, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.