ETV Bharat / state

ஈஷாவில் 'தமிழ் தெம்பு' திருவிழா கோலாகலம்.. முதல்முறையாக ரேக்ளா பந்தயம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 4:03 PM IST

Isha Yoga Center: தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான மாட்டு வண்டி பந்தயம் முதல்முறையாக கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ளது.

tamil thembu festival celebration in isha
ஈஷாவில் தமிழ் தெம்பு திருவிழா கொண்டாட்டம்

கோயம்புத்தூர்: மாட்டு வண்டி பந்தயம் (ரேக்ளா போட்டி) தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று. இந்நிலையில், இப்பந்தயம் வரும் மார்ச் 17ஆம் தேதி கோவை ஈஷா யோகா மையத்தில் முதல்முறையாக நடைபெற உள்ளது. மேலும், விவசாயிகள் பயன் பெறும் விதமாக நாட்டு மாட்டுச் சந்தையும், இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு (மார்ச் 15, 16, 17) நடைபெற உள்ளது.

தமிழ் நாகரிகம் என்பது ஆன்மீகமும், அறிவியலும் ஒன்றோடு ஒன்று கலந்து உருவான பழம்பெரும் நாகரிகம். பகுத்தறிவும், பக்தியும் குறைவில்லாத தமிழ் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களைக் கொண்டாடி மகிழும் விதமாக 'தமிழ் தெம்பு' என்னும் பண்பாட்டு திருவிழாவை ஈஷா ஏற்பாடு செய்துள்ளது.

மார்ச் 9ஆம் தேதி இத்திருவிழா தொடங்கியது. ஆதியோகி முன்பு நடைபெறும் இத்திருவிழாவில், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், நாட்டுப்புறக் கலைகளை கண்டு ரசிக்கும் விதமாக மாலை 6 மணிக்கு சலங்கை ஆட்டம், பறையாட்டம், தேவராட்டம், கரகாட்டம், தஞ்சாவூர் தவில் போன்ற பல்வேறு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்கள் மற்றும் பல்லவ மன்னர்களின் சிறப்புகள், கட்டிட கலைக்கும், பக்திக்கும் உதாரணமாக திகழும் தமிழ் கோயில்கள், ராமானுஜரில் தொடங்கி முத்துராமலிங்கத் தேவர், வ.உ.சி, காமராஜர் மற்றும் அப்துல் கலாம் வரை தமிழ் சமூகத்திற்கு பங்காற்றிய பெருந்தலைவர்களின் குறிப்புகள், பக்தியால் தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களின் சிறப்புகள் உள்பட பல்வேறு விஷயங்களைப் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இது தவிர, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் நாட்டு மாட்டு இனங்களை ஒரே இடத்தில் கண்டு வியக்கும் வகையில், நாட்டு மாட்டு கண்காட்சி, ஆரோக்கியமான உணவுகளை உண்டு மகிழ பாரம்பரிய உணவுகளின் அரங்குகள், தமிழ் மருத்துவ முறைகளை அறிந்து கொள்ள உதவும் சித்த மருத்துவ குடில், குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ ராட்டினங்கள், குதிரை சவாரி போன்ற பல்வேறு அம்சங்கள் இத்திருவிழாவில் இடம்பெற்று உள்ளன.

அத்துடன் விவசாயிகள் பயன்பெறும் வகையில், நாட்டு மாட்டு சந்தை இன்று தொடங்கி மார்ச் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாட்டு மாட்டு இனங்களை வாங்கவும், விற்கவும் முடியும். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு 84280 38212 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழ் தெம்பு என்ற தலைப்பில் பெண்களுக்காக சிறப்பு கோலப்போட்டி நாளை (மார்ச் 16) நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் மூன்று அணிகளுக்கு முறையே ரூ.33 ஆயிரம், ரூ.22 ஆயிரம் ரூ.11 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 94425 10429, 82481 28349 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: காதல் பற்றி தெரிந்துகொள்ள ரோமியோ படத்தை அவசியம் பாருங்க: விஜய் ஆண்டணி அட்வைஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.