சென்னை: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் குடியிருப்ப்வாசிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் 2024 மற்றும் 2025ஆம் ஆண்டிற்கான செயல்பாட்டு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
- அதில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் விளையாட்டில் ஆர்வம் உள்ள திறமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கைப்பந்து, கபடி, கூடைப்பந்து,கால்பந்து போன்ற விளையாட்டுகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- மேலும் இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5000 நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாவும்.அதன் அடிப்படையில் 5000 நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த திட்டபகுதிக்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள ஏதுவாக 70 கோடி ரூபாய்க்கு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது.
- நில உரிமை உள்ள நலிவுற்ற மக்கள் பயன் பெறும் வகையில் தாமாக வீடுகட்டிக் கொள்ளும் திட்டத்தின் கீழ் மாநகரங்கள், நகரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் 1லட்சம் தனி வீடுகள் கட்டிக் கொள்ள மானியம் வழங்கப்படும்.
- மேலும் நாவலூர் திட்டப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள்,இளைஞர் மற்றும் குழந்தைகளுக்காக 1கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு திடல் அமைக்கப்படும்.
- பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கிட 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிற் பயிற்சி கூடம் அமைக்கப்படும்.
- மேலும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் 2000 மகளிருக்கு சிறப்பு சுயதொழில் பயிற்சி வழங்குவதுடன் வங்கிகடன் இணைப்பு செய்து வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஈரோடு மாவட்டம் நல்லகவுண்டன்பாளையம் திட்டப்பகுதியில் 3ஆயிரத்து 264 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வாழும் மக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு கடைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
இதையும் படிங்க: இனியாவது முதலமைச்சர் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்