ETV Bharat / state

பாம்பு விஷம் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் அரசு.. உலக பாம்புகள் தின சிறப்புத் தொகுப்பு! - World Snake Day 2024 - WORLD SNAKE DAY 2024

World Snake Day 2024: உலகளவில் எவ்வளவு வகையான பாம்புகள் உள்ளன, பாம்பு கடியால் இந்தியாவில் எவ்வளவு உயிரிழப்புகள் நேரிடுகின்றன மற்றும் இருளர்கள் பிடித்துக் கொடுக்கும் பாம்புகளின் விஷத்திலிருந்து தமிழக அரசு எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றது என்பதை பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

பாம்பு விஷம் எடுக்கும் முறை
பாம்பு விஷம் எடுக்கும் முறை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 7:01 AM IST

சென்னை: உலகளவில் ஜூலை 16 ஆம் தேதி பாம்புகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நாம் எவ்வாறு தந்தையர் தினம், அன்னையர் தினம் கடைப்பிடிக்கிறமோ அதுபோல பாம்புகள் தினமும் கடைபிடிக்கப்படுகிறது. பாம்புகள் என்று சொன்னாலே நமது நினைவுக்கு முதலில் வருவது பயம் தான்.

உலகில் பாம்பு கடியின் தலைநகரம் இந்தியா என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. ஆம், உலகில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் வரை பாம்பு கடியால் உயிரிழப்புக்கு ஆளாகின்றனர். அதில் இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 58 ஆயிரம் பேர் வரை பாம்பு கடியால் உயிரிழக்கின்றனர்.

உலகளவில் 3,500 வகையான பாம்புகள் உள்ளன. அதில், 600 வகை பாம்புகளே விஷத்தன்மை கொண்டவை. அதிலும், 200 வகையான பாம்புகள் மட்டும் மனிதனைக் கொல்லும் அளவுக்கு கொடிய விஷத்தன்மை கொண்டவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை 62 வகை பாம்புகள் விஷத்தன்மை மற்றும் பாதியளவு விஷத்தன்மை கொண்டவையாக உள்ளன. அதில் நாகப்பாம்பு, ராஜநாகம், கட்டுவிரியன், சுருட்டை பாம்பு, கண்ணாடி விரியன் போன்றவை கொடிய விஷத்தன்மை கொண்டவை.

பாம்பு கடி உயிரிழப்பு : உலகில் ஆண்டுதோறும் 54 லட்சம் பேர் பாம்பு கடியால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் வரை பாம்பு கடியால் உயிரிழப்புக்கு ஆளாகின்றனர். அதில், இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 58 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கின்றனர்.

தென் அமெரிக்கா, ஆப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் பாம்பு கடியால் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக, இந்திய அளவில் பார்த்தால் பாம்பு கடியால் அதிக உயிரிழப்பு நேரிடும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

பாம்புகள் விஷம் : வயது முதிர்ந்த பாம்புகள் தன்னிடம் சுரக்கும் விஷத்தை வேஸ்ட் செய்ய விரும்பாது. இரையை எடுப்பதற்காக தான் பயன்படுத்தும். ஆனால் குட்டி பாம்புகள் தான் தெரியாமல் கடிக்கும்போது அதிகளவு விஷத்தை வேஸ்ட் செய்யும். அதனால் தான் குட்டி பாம்புகள் கடித்தால் அதிக விஷம் உடலில் ஏறுவதுண்டு.

பாம்பு விஷம் மூலம் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்பட்டாலும், அதே பாம்பு விஷத்தில் இருந்து தான் விஷ முறிவு மருந்தும் தயாரிக்கப்படுகின்றது. குறிப்பாக இந்தியாவில் நான்கு விதமான பாம்புகளில் இருந்து தான் பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது.

இந்த 4 வகை பாம்புகளை கடந்து மற்ற விஷமுள்ள பாம்புகள் கடித்தால் கைவசம் உள்ள விஷமுறிவு மருந்து பலனளிப்பது குறைவு. அதனால் இந்தியாவில் உள்ள பாம்பு இனங்களின் விஷம் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு ஏற்ப, புதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட வேண்டியதும் அவசியமாகிறது.

இதற்காகவும், இருளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் தமிழக அரசு கடந்த 1978 ஆம் ஆண்டு தொழில்துறை மற்றும் வணிகத் துறையின் கீழ் மாமல்லபுரத்தை அடுத்த வடநெமிலி பகுதியில் இருளர் பாம்பு பிடிப்போர் தொழிற் கூட்டுறவு சங்கம் ஒன்றை உருவாக்கியது.

இச்சங்கத்திற்கு தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அலுவலர் ஒருவர் சங்க செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். இதில் தலைவர் மற்றும் துணைத் தலைவர், 5 உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உள்ளனர்.

இச்சங்கத்தின் கீழ் பாம்பு பண்ணை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு கொடுக்கும் அரசாணைப்படி ஆண்டுதோறும் இந்த பாம்பு பண்ணைக்கு தேவையான பாம்புகளை பிடித்து விஷம் எடுக்கப்படுகிறது. ஜூலை மாதம் முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை அனுமதிக்கப்பட்ட பாம்புகளை பிடித்து பண்ணைக்கு வழங்கி வருகின்றனர். இருளர்கள் பிடிக்கும் பாம்புக்கு ஏற்றவாறு பணமும் கொடுக்கப்படுகிறது.

வடநெமிலியில் செயல்பட்டு வரும் இருளர் பாம்பு பிடிப்போர் தொழிற் கூட்டுறவு சங்க செயலாட்சியர் பாலாஜி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், "இச்சங்கத்தில் பாம்பு பிடிக்க லைசன்ஸ் பெற்ற ஆண்கள், பெண்கள் என 339 பேர் உள்ளனர். அவர்கள் பிடித்து கொடுக்கும் பாம்புக்கு பணம் கொடுத்து சங்கம் பாம்புகளை பெற்றுக்கொண்டு விஷத்தை எடுத்து விற்பனை செய்து வருகிறது.

அதில் கண்ணாடிவிரியன், நாகப்பாம்புக்கு ரூ.2760, கட்டுவிரியன் பாம்புக்கு ரூ.1020, சுருட்டை விரியன் பாம்புக்கு ரூ.360 வழங்கப்படுகிறது. இவர்கள் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பாம்புகளை பிடித்து பண்ணைக்கு கொடுக்கின்றனர். அப்படி பிடித்து வரும் பாம்புகளை 22 நாட்கள் பண்ணையில் வைத்து 4 நாட்களுக்கு ஒரு முறை என 4 முறை ஒரு பாம்மிடம் இருந்து விஷம் எடுக்கப்படுகிறது.

விஷம் எடுத்த பாம்பிற்கு வால் பகுதியில் ஒரு அடையாளம் வைத்து அந்த பாம்புகளை மீண்டும் பாதுகாப்பாக, அவைகள் வாழ ஏற்ற இடங்களில் பத்திரமாக பண்ணை ஊழியர்கள் உதவியுடன் விடப்படும். விஷம் எடுக்கப்படும் பாம்பிற்கு அடையாளம் வைப்பது மூலம் குறுகிய காலத்தில் அதே பாம்பிடம் இருந்து மீண்டும் விஷம் எடுப்பதை தவிர்க்க உதவுகிறது.

மீண்டும் மீண்டும் குறுகிய நேரத்தில் அதே பாம்பிடம் இருந்து விஷம் எடுப்பதால் அந்த பாம்பின் பல் சேதம் அடைய வாய்ப்புள்ளது. எனவே, விஷம் எடுக்கும் பாம்பிற்கு அடையாளம் வைக்கப்படுகிறது. அப்படி பிடிப்பட்ட பாம்பிடம் இருந்து எடுக்கப்படும் விஷம் இந்தியாவில் உள்ள பல்வேறு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது.

பாம்பு விஷம் கேட்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு பார்சல் மூலமாக அனுப்படுகிறது. அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் 1807.150 கிராம் விஷம் எடுக்கப்பட்டு ரூ.5 கோடியே 43 லட்சத்து 53 ஆயிரம்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில், வட நெமிலி பாம்பு பண்ணை சங்கத்திற்கு நிகர லாபம் மட்டும் ரூ. 2.36 கோடி வருவாய் கிடைத்துள்ளது" என்று பாலாஜி தெரிவித்தார்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் டெங்கு பரவல் எதிரொலி; தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்! - Dengue Precautionary Measures in TN

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.