ETV Bharat / state

எஸ்.ஆர்.எம் ஹோட்டல் விவகாரம்; ரூ.38 கோடி நிலுவை - சுற்றுலாத்துறை தகவல்! - TRICHY SRM HOTEL ISSUE - TRICHY SRM HOTEL ISSUE

TRICHY SRM HOTEL LEASE ISSUE: திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலின் 30 ஆண்டு கால குத்தகை முடிவடைந்த நிலையில், 38 கோடியே 85 லட்சத்து 65 ஆயிரத்து 837 ரூபாயை ஹோட்டல் நிர்வாகம் செலுத்தவில்லை என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

TRICHY SRM HOTEL NAME BOARD
TRICHY SRM HOTEL NAME BOARD (Credit -ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 2:29 PM IST

திருச்சி: திருச்சி காஜாமலை பகுதியில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான இடத்தை 30 ஆண்டுகள், அதாவது 1994ஆம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி குத்தகைக்கு எடுத்து எஸ்.ஆர்.எம் ஹோட்டல் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜூன் 13ஆம் தேதியுடன் 30 ஆண்டு கால குத்தகை முடிந்தது.

இந்நிலையில், நேற்று (ஜூன் 14) ஹோட்டலை காவல் துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, ஹோட்டலில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் கட்சியினரை உடனடியாக வெளியேற வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அரசு அதிகாரிகளுக்கும், ஹோட்டல் நிர்வாகத்தினர் மற்றும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு வரை சென்றது.

இந்த விவகாரம் பேசு பொருளாக மாறிய நிலையில்,பல அரசியல் தலைவர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த சம்பவம் நடத்திருப்பதாக திமுக அரசை குற்றம் சாட்டினர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு கிராமத்தில் 4.70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் எஸ்.ஆர்.எம் ஓட்டல் நிறுவனத்திற்கு, கடந்த 1994-ஆம் ஆண்டில் 30 வருட காலத்திற்கு குத்தகை விடப்பட்டது.

மேற்படி இடம் குத்தகைதாரருக்கு 1994ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி, அன்று ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் எஸ்.ஆர்.எம். ஓட்டல் நிறுவனம் ஆகிய இரு தரப்பினரும் சம்மதித்து கையெழுத்திடப்பட்ட இந்த குத்தகை ஒப்பந்தமானது கடந்த 13ம் தேதி, அன்றுடன் முடிவடைந்து விட்டது.

1994ஆம் ஆண்டு குத்தகை வழங்கப்பட்ட அரசாணையின்படி, மேற்படி நிலத்திற்குச் சந்தை விலையின் அடிப்படையில், 7 சதவீதம் வருடாந்திர குத்தகைத் தொகை கணக்கிட்டு, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் 30 ஆண்டு காலத்திற்கு குத்தகைத் தொகை ரூ.47,93,85,941 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதில், நாளது தேதி வரை குத்தகைதாரர் எஸ்.ஆர்.எம். ஓட்டல் நிறுவனம் செலுத்திய தொகை ரூ.9,08,20,104 மட்டுமே.

மீதமுள்ள நிலுவைத் தொகையான ரூ.38,85,65,837-ஐ குத்தகைதாரர் இதுவரை செலுத்தவே இல்லை. இவ்வாறு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தில் 30 ஆண்டுகளாக முழுமையான குத்தகை தொகையைச் செலுத்தாமல் எஸ்.ஆர்.எம். நிறுவனம் தனது ஹோட்டலை தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.

குத்தகை ஒப்பந்தத்தில், மேற்படி நிலமானது 1994ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி முதல் 2024ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி வரையிலான 30 வருட காலத்திற்கு மட்டும் தான் குத்தகைக்கு விடப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எக்காரணத்தை முன்னிட்டும் குத்தகைக் காலத்தை மேலும் நீட்டிக்க ஒப்பந்தக்காரர் கோரக் கூடாது என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குத்தகை முடியும் நாளில் குத்தகைதாரரால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு எவ்வித நிபந்தனையுமின்றி நிலம் மற்றும் கட்டடங்களை எவ்வித சேதாரமுமின்றி ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒப்பந்தத்தின் சாராம்சத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நிலுவைத் தொகையை செலுத்த கடந்த மே மாதம் 2ம் தேதி நாளன்று (ஒரு மாத காலத்திற்கு முன்பாக) குத்தகைதாரருக்கு எழுத்துப்பூர்வமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல், குத்தகைக் காலம் ஜூன் 13ம் தேதி அன்றுடன் முடிவடைகிறது என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒப்பந்ததாரரால் நாளது தேதி வரை நிலுவைத் தொகை ரூ.38,85,65,837 செலுத்தப்படாமல் இன்னும் நிலுவையாகவே உள்ளது. உண்மை நிலை இவ்வாறு இருக்க, சில ஊடகங்களில் எஸ்.ஆர்.எம். ஹோட்டல் சார்பாக தவறான மற்றும் உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குத்தகைக் காலம் முடிவடைந்ததாலும், குத்தகைதாரர் முறையாக, முழுமையான குத்தகைத் தொகையைச் செலுத்தாததாலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அரசாணை மற்றும் ஒப்பந்தத்தின்படிதான் முறையான நடவடிக்கையை எடுத்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருச்சி லால்குடி எம்எல்ஏ மரண அறிவிப்பு.. கே.என்.நேருவால் அதிருப்தி? திமுகவிற்குள் வெடித்த சர்ச்சை! - lalgudi mla soundarapandian issue

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.