ETV Bharat / state

தாழ்வான சில பகுதிகளில் மட்டுமே தேங்கி நிற்கும் நீர் - துரித நடவடிக்கை மேற்கொண்டுவரும் அரசு! - TAMIL NADU WEATHER UPDATE

tamil nadu rains weather live updates and latest news thumbnail
தமிழ்நாடு வானிலை நிலவரம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2024, 9:44 AM IST

Updated : Oct 15, 2024, 11:41 AM IST

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைவதால், அக்டோபர் 16ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான ரெட் அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. இந்த சூழலில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 12 கி.மீ வேகத்தில், மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LIVE FEED

10:09 AM, 16 Oct 2024 (IST)

அம்மா உணவகங்களில் உணவு இலவசம்!

அதிகளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகரத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் பயனடையும் விதமாக, அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

10:00 AM, 16 Oct 2024 (IST)

சென்னை மெட்ரோ அப்டேட் (Chennai Metro Train)

காலை 9 மணிமுதல் இரவு 11 மணி வரை மெட்ரோ சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  1. சென்ட்ரல் மெட்ரோ முதல் சென்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ வரை ஐந்து நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
  2. ப்ளூ லைன்: விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை 6 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும்.
  3. வண்ணாரப்பேட்டை, ஆலந்தூர் இடையே 3 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும்.

கோயம்பேடு மெட்ரோ, சென்ட் தாமஸ் மவுண்ட், அரும்பாக்கம் மெட்ரோ ஆகிய இடங்களில் இருக்கும் வாகன நிறுத்தங்களை யாரும் பயன்படுத்த வேண்டாம் என மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

8:59 AM, 16 Oct 2024 (IST)

"காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்வு"

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 12 கி.மீ வேகத்தில், மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது சென்னையிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 360 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து கிழக்கே 390 கி.மீ தொலைவிலும், ஆந்திர மாநிலத்தின் நல்லூரிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 450 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

தொடர்ந்து, மேற்கு - வட மேற்கு நோக்கி நகர்ந்து வடதமிழ்நாடு - தெற்கு ஆந்திர கடற்கரையோரம் புதுச்சேரிக்கும், நல்லூருக்கும் இடையே நாளை காலை கரையை கடக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8:52 AM, 16 Oct 2024 (IST)

"சென்னையில் கொட்டி தீர்த்த அதி கனமழை"

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 23 சென்டிமீட்டரும், அதற்கு அடுத்தபடியாக திருவிக நகர், கொளத்தூர் மற்றும் அம்பத்தூரில் 22 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

8:42 AM, 16 Oct 2024 (IST)

சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ் - வெதர்மேன் பிரதீப் ஜான் கொடுத்த அப்டேட்!

காற்றழுத்தத் தாழ்வு நிலை சென்னையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், மேகக் கூட்டங்கள் வடக்கு நோக்கி நகர்ந்ததால் சென்னைக்கு பெருமழை இல்லை. அதனால், சென்னை மக்கள் சற்று இளைப்பாறலாம். சென்னையில் நேற்று பெய்த அதீத கனமழை இன்று இருக்காது; ஆனால், கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

பருவமழை தெற்கு ஆந்திராவுக்கு மாறிவிட்டதால், சென்னையில் 18-20 தேதிகளில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலத்தில் நகரும் போது, ​​சமாளிக்கக்கூடிய மழையாகவே இருக்கும். எனவே மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை வீட்டிற்குக் கொண்டு வரலாம். மேலும், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களில் சென்னையில் சில இடங்களில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது - தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

7:28 AM, 16 Oct 2024 (IST)

திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.

10:49 PM, 15 Oct 2024 (IST)

அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு!

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரக் கால கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் காணொளி வாயிலாக பொதுமக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

9:57 PM, 15 Oct 2024 (IST)

11 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

7:34 PM, 15 Oct 2024 (IST)

சேலம்: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தொடர் மழை காரணமாக நாளை(அக்.16) சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு

7:34 PM, 15 Oct 2024 (IST)

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு விடுமுறை!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை(அக்.16) ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா உத்தரவு

6:20 PM, 15 Oct 2024 (IST)

24 மணிநேரமும் ஆவின் பால் விற்பனை

சென்னையில் கன மழையிலும் தங்கு தடையின்றி ஆவின் பால் கிடைக்க அம்பத்தூர், அண்ணா நகர், மாதவரம் உள்ளிட்ட 8 இடங்களில் 24 மணி நேரமும் ஆவின் விற்பனையகங்கள் செயல்படும் என ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

6:19 PM, 15 Oct 2024 (IST)

மழையில் சிக்கிய மூதாட்டி மீட்பு

சென்னை ராமாபுரம் ராயலா நகரில் வெள்ள நீரால் வெளியேற முடியாமல் தவித்து வந்த 85 வயது மூதாட்டி மற்றும் அவரது மகனை, போக்குவரத்து காவல் துறையை சேர்ந்த சுபா அருண்(SI) சுப்புரமணியன், குருபாண்டியன் ஆகியோர் பத்திரமாக மீட்டனர்

6:19 PM, 15 Oct 2024 (IST)

மேட்டுப்பாளையம் - ஊட்டி போக்குவரத்து பாதிப்பு

மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதை கல்லாறு அருகே முதலாவது கொண்டை ஊசி வளையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு; மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்பு, வனத்துறை, காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

4:49 PM, 15 Oct 2024 (IST)

எட்டு சுரங்கப்பாதைகள் மூடல் - இருப்பிடத்தை விட்டு வெளியேறும் மக்கள்!

கனமழையால் நீர் தேங்கியுள்ளதன் காரணமாக பெரம்பூர் இரயில்வே சுரங்கப்பாதை உள்ளிட்ட சென்னையின் 8 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. மேலும், சென்னை திருவெற்றியூரில் பெய்து வரும் கனமழையினால், வீடுகளில் நீர் புகுந்துவிடும் அபாயம் இருப்பதால், தங்கள் இருப்பிடத்தை விட்டு பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர்.

4:44 PM, 15 Oct 2024 (IST)

சென்னையை சுற்றியுள்ள ஏரிகளின் நீர் இருப்பு!

சென்னை மக்களின் நீர் ஆதாரமாகத் திகழும் செம்பரம்பாக்கம், பூண்டி, சோளவரம், வீராணம் போன்ற ஏரிகளின் நீர் இருப்பு குறித்தத் தகவலை தமிழ்நாடு பொதுப்பணித் துறை வெளியிட்டுள்ளது.

Water availability of lakes around Chennai details
ஏரிகளின் நீர் இருப்பு (ETV Bharat Tamil Nadu)

3:47 PM, 15 Oct 2024 (IST)

பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அத்தியாவசிய சேவை துறைகள் தவிர பிற அரசு அலுவலகங்களுக்கும் நாளை (16.10.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

3:24 PM, 15 Oct 2024 (IST)

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் - வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவற்றை கீழ்வருமாறு காணலாம்.

  • நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை, தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றுள்ளது.
  • அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.
  • கடந்த 24 மணிநேரங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
  • 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது.
  • அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
  • ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகியப் பகுதிகளில் மிகக் கனமழைப் பெய்யக்கூடும்.
  • திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும்.
  • நாளை (அக்டோபர் 16) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
  • அக்டோபர் 17, வடமேற்கு மாவட்டங்களான திருப்பத்தூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிக கனமழைப் பெய்யக்கூடும்

குமரி கடல், மன்னார் வளைகுடா, மத்திய மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், ஆந்திர எல்லையை ஒட்டிய கடல் பகுதிகளில் 30 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று பாலச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

3:11 PM, 15 Oct 2024 (IST)

தியாகராய நகர் மேம்பாலத்தில் கார் பார்க்கிங்!

வேளச்சேரி பள்ளிக்கரணை மேம்பாலங்களைத் தொடர்ந்து சென்னை தியாகராய நகர் கலைவாணர் மேம்பாலத்தின் இரு புறங்களிலும் கார்களை பொதுமக்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

chennai tnagar bridge parking
தி.நகர் கலைவாணர் மேம்பாலம் (ETV Bharat Tamil Nadu)

1:44 PM, 15 Oct 2024 (IST)

பெருங்குடியில் பயங்கர வெள்ளம்! சென்னை வெதர்மேன் அளித்த லைவ் ரிப்போர்ட்!

வானிலையைத் துல்லியமாகக் கணித்துச் சொல்லும் சென்னை வெதர்மேன் பிரதீப் ஜான், பெருங்குடி சாலையில் பயணித்துள்ளார். அப்போது அதை வீடியோவாக எடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கொட்டும் பயங்கர மழையில் என் பெரிய கண்களுக்கே சாலை தெரியவில்லை. பெருங்குடி சாலை மொத்தம் வெள்ளக்காடாக மாறி இருக்கிறது," எனத் தெரிவித்துள்ளார்.

1:29 PM, 15 Oct 2024 (IST)

பெரம்பூர், கொளத்தூர், அயப்பாக்கம் பகுதிகளில் அதிகபட்ச மழை!

சென்னையில் பெய்ந்த மழையின் அளவு தொடர்பான தகவல்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதில் கொளத்தூர், பெரம்பூர், அயப்பாக்கம், அம்பத்தூர், அண்ணா நகர் மேற்கு, வேளச்சேரி, நியூ மணாலி டவுன், கதிவாக்கம் ஆகிய இடங்களில் 120 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைப் பதிவாகியுள்ளது.

chennai rain data oct 15 12pm
அக்டோபர் 15, பகல் 12 மணிவரை சென்னையில் பெய்த மழையின் அளவு. (Greater Chennai Corporation)

1:09 PM, 15 Oct 2024 (IST)

தூய்மைப் பணியாளர்களுக்கு பிஸ்கட் கொடுத்து ஊக்கப்படுத்திய முதலமைச்சர்!

முதலமைச்சர் மு க ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் சென்னை யானை கவுனி பகுதியில் நடைபெற்ற வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை பார்வையிட்டு அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து புளியந்தோப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின், சாலையோர தேநீர் கடையில் தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்தி தூய்மை பணியாளர்களுக்கு பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருள்களையும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக ஓட்டேரி பகுதியில் மழை நீர் செல்லும் கால்வாயில் மேற்கொள்ளப்படும் பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர், அப்பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கினார்.

12:58 PM, 15 Oct 2024 (IST)

சென்னையில் இதுவரை பதிவான மழை நிலவரம்!

சென்னையில் 24 மணி நேரத்தில் 46.48 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.1 செ.மீ மழையும் தேனாம்பேட்டையில் 6.1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 8 மரங்கள் காற்றின் வேகம் காரணமாக முறிந்து விழுந்துள்ளது.

12:42 PM, 15 Oct 2024 (IST)

உடனடியாக வெள்ளத்தை அப்புறப்படுத்துங்கள் - மக்கள் கோரிக்கை!

கனமழையினால் ஏற்படும் வெள்ளத்தைத் தேங்கவிடாமல் அரசு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும், மழை நீரினால் தேங்கும் வெள்ளத்தில் பள்ளம் மேடு தெரியாமல் வாகனம் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

12:21 PM, 15 Oct 2024 (IST)

நீரில் மூழ்கும் சுரங்கப் பாதைகள்!

வியாசர்பாடி, கணேசபுரம், பெரம்பூர் ஹைரோடு, வில்லிவாக்கம், துரைசாமி, மேட்லி, ரங்கராஜபுரம், அரங்கநாதன் ஆகிய சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே, இந்த பாதையில் யாரும் செல்ல வேண்டாம் என சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

chennai subway alert
சென்னை சுரங்கப்பாதைகளின் நிலவரம். (ETV Bharat Tamil Nadu)

12:06 PM, 15 Oct 2024 (IST)

சென்னைக்கு ரெட் அலெர்ட்!

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளுக்கு, அடுத்த 24 மணிநேரம் ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது. கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

12:02 PM, 15 Oct 2024 (IST)

முதலமைச்சர் ஆய்வு!

சென்னையில், யானைகவுனி, புளியந்தோப்பு ஆகிய மழை வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

11:52 AM, 15 Oct 2024 (IST)

தேமுதிக அலுவலகக் கதவுகள் திறந்திருக்கும்!

மழை வெள்ளதால் பாதிக்கப்படும் மக்களுக்கு தங்க இடம், உணவு ஆகியவற்றை நாங்கள் வழங்குவோம் என தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார்.

11:46 AM, 15 Oct 2024 (IST)

மழை பாதித்தப் பகுதிகளில் ஆய்வு; களத்தில் இறங்கும் முதலமைச்சர்!

மழை பாதித்தப் பகுதிகளை இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

11:38 AM, 15 Oct 2024 (IST)

சென்னை விமானங்கள் ரத்து?

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால், பெங்களூர், அந்தமான், டெல்லி, மஸ்கட் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு விமானங்கள் வெளியூர்களில் இருந்து வருகை தருவது என்பது குறிப்பிடத்தக்கது.

11:10 AM, 15 Oct 2024 (IST)

துணை முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பு; இரண்டு சுரங்கப்பாதைகள் மூடல்!

தமிழ்நாட்டில் தீவிர மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தற்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தெரிவித்த சில முக்கிய தகவல்கள் என்ன என்பதை கீழ்வருமாறு காணலாம்.

  • இதுவரை 1,500 அழைப்புகள் வந்துள்ளன. அதில், 600 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
  • சென்னை கணேசபுரம் மற்றும் பெரம்பூர் ஹைரோடு சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.
  • 300 இடங்களில் நீர் வெளியேற்றும் பணிகள் நடந்துவருகிறது.
  • கடந்த 24 மணிநேரததில் எங்கும் மின்வெட்டு ஏற்படவில்லை.
  • தமிழ்நாடு முழுவதும் 65,000 தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர்.
  • சென்னையில் 13,000 தன்னார்வலர்கள் களத்தில் உள்ளனர்.
  • ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை அனுமதிக்கும்படி அறிவுறுத்தப்படும்.
  • தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுக்களைக் கொண்டு 26 பணி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • சென்னையில் 89 படங்குகளும், பிற மாவட்டங்களில் 130 படகுகளும் மீட்புப் பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளன.
  • சென்னையைச் சுற்றிலும் 300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்கிறது.
  • சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் 631 நிவாரண மையங்கள் சேவையளிக்க தயாராக உள்ளன.
  • சென்னையில் 15 ஐஏஎஸ் அலுவலர்கள் வெள்ளத்தைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

10:48 AM, 15 Oct 2024 (IST)

சுரங்கப்பாதையில் 3 அடி வெள்ளம்?

பெரம்பூர் ஹைரோடு சுரங்கப்பாதையில் சுமார் மூன்றடி அளவிற்கு வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Perambur High Road Tunnel
பெரம்பூர் ஹைரோடு சுரங்கப்பாதை (ETV Bharat Tamil Nadu)

10:35 AM, 15 Oct 2024 (IST)

சென்னை மண்டல மின் வாரிய அலுவலர்கள் தொடர்பு எண்கள் வெளியீடு!

சென்னை நகரில் மழை நேரங்களில் மின்சார பிரச்சினைகள் இருந்தால், அலுவலர்களைத் தொடர்புகொள்ளும் வகையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

10:21 AM, 15 Oct 2024 (IST)

ஆன்லைன் வகுப்புகளும் வேண்டாம்!

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.

10:14 AM, 15 Oct 2024 (IST)

பெரம்பூர் ஹைரோடு சுரங்கப்பாதையில் மழை வெள்ளம்!

சென்னை நகர் பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளின் நிலவரம் குறித்து சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, பெரம்பூர் ஹைரோடு சுரங்கப்பாதையில் மட்டும் நீர் தங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

chennai subway rain floods data
சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation)

10:05 AM, 15 Oct 2024 (IST)

காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து மத்திய வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, புதுச்சேரி, வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையோரம் அடுத்த இரண்டு தினங்களுக்கு நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9:47 AM, 15 Oct 2024 (IST)

வேளச்சேரி மேம்பாலத்தில் தஞ்சமடைந்த கார்கள்!

வேளச்சேரி மேம்பாலத்தில் இரண்டாவது நாளாக கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. பொதுமக்கள் மேம்பாலத்தின் இருபுறமும் வாகனங்களை நிறுத்திச் சென்றுள்ளனர். இதற்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

velachery flyover car parking images
வேளச்சேரி மேம்பாலத்தில் கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டிருக்கும் காட்சி. (Etv Bharat Tamil Nadu)

Last Updated : Oct 15, 2024, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.