சென்னை: மகப்பேறு இறப்பு விகிதம் குறைப்பது குறித்த மாநில பணிக்குழுவின் (State Level Task Force) முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநிலத்தில் மகப்பேறு இறப்பு விகிதத்தினை குறைக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தின் இயக்குநர் ஷில்பா பிரபாகர் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மகப்பேறு இறப்பு விகிதம்: மகப்பேறு இறப்பு விகிதம் என்பது உயிருடன் பிறந்த 1 லட்சம் குழந்தைகளில், தாய் இறப்பின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. தமிழ்நாடு, மகப்பேறு இறப்பு விகிதம் குறைப்பதில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகிறது.
அவசர கால கட்டுப்பாட்டு அறை@CMOTamilnadu @mkstalin @mp_saminathan @Subramanian_ma @TNDPHPM @NHM_TN #TNDPR #TNMediahub #CMMKStalin #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu pic.twitter.com/OmMQEBrgT7
— TN DIPR (@TNDIPRNEWS) October 23, 2024
குறிப்பாக 2020-ஆம் ஆண்டின் (SRS) தரவுகளின்படி, தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதம் 54-ஆக குறைந்துள்ளது. இது தேசிய சராசரியான 97 என்பதை விட மிகக் குறைவு. அதே போல் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மகப்பேறு இறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டதில், ஐந்து முக்கிய காரணிகள் உட்பட பல காரணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன
- பிரசவத்திற்கு பிந்தைய இரத்தப்போக்கு (20%),
- கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்த கோளாறுகள் (19%)
- செப்சிஸ் (10%)
- இதய நோய் (9%)
- கருக்கலைப்பு (4%) மற்றும் பிற நோய்கள் (38%) உள்ளிட்டவைகள் மகப்பேறு இறப்பிற்கு முக்கிய காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து தேசிய சுகாதார குழுமத்தின் இயக்குநர் ஷில்பா பிரபாகர் தமிழ்நாட்டில், மகப்பேறு இறப்பு விகிதத்தினை குறைப்பது குறித்து விரிவான விளக்கத்தை அளித்தார்.
இதையும் படிங்க: "உங்களைத் தேடி உங்கள் ஊரில்"..பொள்ளாச்சி மக்களை சந்தித்த கோவை கலெக்டர்!
அதன்படி, "2014-2024 வரையிலான தரவுகளின்படி, 72 சதவீத இறப்புகள் கிராமப் புறங்களிலும் 28 சதவீத இறப்புகள் நகர்ப்புறங்களிலும் நிகழ்ந்துள்ளன. தஞ்சாவூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, தேனி, நாமக்கல், திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், மகப்பேறு இறப்பு விகிதம், 55- க்கும் மேல் இருப்பது கண்டறியப்பட்டு, அம்மாவட்டங்களில் மகப்பேறு இறப்பு விகித விவரங்களை பணிக்குழு ஆய்வு செய்தது.
- இந்த கூட்டத்தில், "மகப்பேறு இறப்புகளைக் குறைப்பதற்காக, 7 மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட பிரத்யேக குழு (War Room) ஒன்றை தேசிய சுகாதார இயக்கக அலுவலகத்தில் அமைத்து, 24/7 அடிப்படையில் ஒருங்கிணைத்து கண்காணிக்கப்படும்.
- தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதம் 54-க்கு மேல் உள்ள மாவட்டங்களுக்கு வழிகாட்டுதல் திட்டத்தை கொண்டு வர பணிக்குழு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மாவட்டமும் மூத்த மகப்பேறு மருத்துவர் தலைமையிலான சிறப்புக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டு வரப்படும்.
3. தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், ஆரம்பகால பரிந்துரைகள், பாதுகாப்பான கருக்கலைப்பு நடைமுறைகள், துறைகளுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பு, சுகாதார வசதிகளின் தரச் சான்றிதழ் மற்றும் அரசு மற்றும் தனியார் துறை சுகாதார வசதிகளில் பொறுப்புணர்வை அறிமுகப்படுத்துதல் தொடர்பான பல ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
4. அனைத்து பெண்களுக்கும் கர்ப்பம் மற்றும் மகப்பேறு காலம் முழுவதும் தேவையான கவனிப்பை உறுதி செய்வதில் முக்கியத்துவம் அளிக்கப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ்நாட்டின் மகப்பேறு இறப்பு விகித அளவை 10-க்கும் கீழ் குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.