ETV Bharat / state

ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் ... சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடிக்கு எந்த துறை தெரியுமா? - Tn govt transfer from IAS officers - TN GOVT TRANSFER FROM IAS OFFICERS

TN Govt : நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு தலைமைச் செயலகம் புகைப்படம்
தமிழ்நாடு தலைமைச் செயலகம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 3:33 PM IST

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள இன்று செய்திக்குறிப்பில், "தமிழக அரசின் மருத்துவத் துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சித் துறை செயலாளராகவும், வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்துவத் துறை செயலாளராகவும், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வித் துறைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா, இந்து அறநிலையத்துறை மற்றும் கலாசாரத் துறை முதன்மைச் செயலாளராக சந்திரமோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக மணிவாசனையும், சமூகப் பாதுகாப்புத் திட்டச் செயலாளராக ஜான் லூயிஸ், பொதுப் பணித்துறை செயலாளராக மங்கத் ராம் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் செய்தி மற்றும் காகிதத் துறை செயலாளராக சந்தீப் சக்சேனாவும், வனத்துறை முதன்மைச் செயலாளராக செந்தில் குமாரும், நெடுஞ்சாலைத் துறை செயலாளராக செல்வராஜூம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநராக விஜயலட்சுமியும், காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராக வெங்கடாச்சலமும், நில சீர்த்திருத்த ஆணையராக ஹரிஹரன் மற்றும் போக்குவரத்துத் துறை சிறப்பு செயலாளராக லில்லி ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : தேனியில் நீளும் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விவகாரம்.. மேலும் 3 இளைஞர்கள் அதிரடி கைது! - Methamphetamine drugs Seized

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.