ETV Bharat / state

78வது சுதந்திர தின விழா: முதலமைச்சரிடம் விருது பெற்றவர்கள் பட்டியல் - 78th Independence Day Celebration - 78TH INDEPENDENCE DAY CELEBRATION

78th Independence Day Celebration: நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கப்படும் நல்லாளுமை விருதுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். குறிப்பாக, இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது குமரி அனந்தனுக்கும், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது பி.வீரமுத்துவேலுக்கும் வழங்கப்பட்டது.

சுதந்திர தினவிழாவில் விருது வழங்கிய முதலமைச்சர் புகைப்படம்
சுதந்திர தினவிழாவில் விருது வழங்கிய முதலமைச்சர் புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 9:33 AM IST

சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பாக நல்லாளுமை விருதுகளை, முதல்வரின் முகவரித்துறை அலுவலர், 4 ஐஏஎஸ் அதிகாரிகள், ஒரு மருத்துவர் ஆகியோருக்கு பல்வேறு பிரிவுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நல்லாளுமையில் சிறந்த பயன் எய்திட பணியாற்றியவர்கள், வெற்றிகரமாக புதிய உத்திகள், புதிய முயற்சிகள் மற்றும் சிறந்த வழிமுறைகளை செயல்படுத்தியதன் வாயிலாக, பொதுமக்களுக்கு சிறந்த சேவை கிடைக்க சக பணியாளர்களை வழிநடத்துவோர், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்க பணிபுரிந்தோருக்கு ஆண்டுதோறும் இந்த நல்லாளுமைக்கான விருது தமிழக முதலமைச்சரால் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள், தனிநபர்கள், ஒரு குழு அல்லது அமைப்பு, நிறுவனம், அலுவலகம் என்ற அடிப்படையில் 3 பிரிவுகளாக வழங்கப்படுகிறது. இதில், விருதாளர்களுக்கு சான்றிதழுடன், ரூ.2 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது.

நல்லாளுமை விருது பெற்ற அதிகாரிகள்: இந்த ஆண்டுக்கான தனி நபர் பிரிவில், தரவு தூய்மைத்திட்டம் வாயிலாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ததற்காக, முதல்வரின் முகவரித்துறையின், தலைமை தொழில்நுட்ப அலுவலர் த.வனிதா, உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கையை விகிதத்தை கணிசமாக உயர்த்தியதற்காக விருதுநகர் ஆட்சியர் வீ.ஜெயசீலனுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

அதேபோல், சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி வாயிலாக தமிழ் இலக்கிய படைப்புகளை உலக மொழிகளுக்கு எடுத்துச்செல்லவும், உலகின் சிறந்த நூல்களை தமிழில் மொழிபெயர்க்கவும் வழிவகை செய்ததற்காக பொது நூலகங்கள் துறை இயக்குநர் க.இளம்பகவத்துக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

அமைப்பு என்ற பிரிவில் உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் ந.கோபால கிருஷ்ணனுக்கும், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை, மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் ச.திவ்யதர்சினிக்கும், நான் முதல்வன் திட்டம் வாயிலாக இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முறைகளில் புதுமை புகுத்தியதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநர் ஜெ.இன்னசன்ட் திவ்யாவுக்கும் நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

தகைசால், அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருது: இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு வழங்கப்பட்டது. டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது இஸ்ரோவின் சந்திரயான் -3 விண்கல திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேலுக்கும், துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வயநாடு நிலச்சரிவின் போது துணிச்சலாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனாவுக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த மாநகராட்சி விருது: சென்னை மாநகராட்சியில் உள்ள 14-வது மண்டலம் சிறந்த மண்டலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த மாநகராட்சியாக கோவை மாநகராட்சியும், சிறந்த நகராட்சியாக திருவாரூர் நகராட்சியும், சிறந்த பேரூராட்சியாக கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பேரூராட்சிக்கும் வழங்கப்பட்டது.

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள்: இதில், ஆண்கள் பிரிவில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நெ.கதிரவனுக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோஷன் ரெகோபெர்ட்க்கும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.ஜெயராஜ்-க்கும் வழங்கப்பட்டது. அதேபோல, பெண்கள் பிரிவில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செ.நிகிதாவுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கவின் பாரதிக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கா.ஆயிஷா பர்வீனுக்கு விருது வழங்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு மாதிரிப்பள்ளிகள் வாயிலாக அரசுப்பள்ளி மாணவர்களை தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறச் செய்ததற்காக தமிழ்நாடு மாதிரிப்பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன், நத்தம் நில ஆவணங்கள் அனைத்தையும் மின்னுருவாக்கம் செய்து இணைய வழியில் பட்டா மாறுதல் செய்யும் வசதியை உருவாக்கியதற்காக ப.மதுசூதன் ரெட்டி, வரி ஆய்வுப் பிரிவு வாயிலாக ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவை வரிவருவாயை பெருக்கியதற்காக வணிகவரி ஆணையர் டி.ஜெகந்நாதன் ஆகியோருக்கு தலைமைச்செயலர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தமிழகத்தில் புதிதாக பதவியேற்ற காவல் கண்காணிப்பாளர்கள்.. போதைப்பொருள் ஒழிப்பில் முனைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.