சென்னை: தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இன்று சென்னை தலைமைச் செயலத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, இறுதி வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 3,03,96,330 பேரும், பெண் வாக்காளர்கள் 3,14,85,724 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 8,294 பேரும் உள்ளனர். மேலும் செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் அதிகப்படியான வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக உள்ளது. சோழிங்கநல்லூர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 6,60,419 என்ற எண்ணிக்கையில் உள்ளனர்.
இரண்டாவதாக கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதியில் மட்டும் 4,62,612 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெள்ளூர் உள்ளது. இந்த தொகுதியில் 1,72,140 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இரண்டாவது குறைவான வாக்களாளர்களைக் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் தொகுதி உள்ளது. இதில் 1,72,624 வாக்களர்களே உள்ளனர்.
இதையும் படிங்க: அயோத்தி விழா; நிர்மலா சீதாராமன் நேரலையில் தரிசிக்க இருந்த எல்இடி திரை அகற்றம்!