ETV Bharat / state

கச்சத்தீவு குறித்து பேசும் பாஜகவினர் அருணாச்சல் விவகாரம் குறித்து பேச தைரியம் இருக்கிறதா? - செல்வப்பெருந்தகை ஆவேசம்! - 2024 lok sabha election

K SELVAPERUNTHAGAI: பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழல்வாதிகளை விட மாட்டோம் என்றார். ஆனால் பாஜகவில் இணைந்தவர்கள் குற்ற வழக்குகள் முடித்துவைக்கபட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

K Selvaperunthagai
K Selvaperunthagai
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 10:36 AM IST

செல்வப்பெருந்தகை செய்தியாளரகள் சந்திப்பு

திருப்பூர்: 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்.19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இந்தியா கூட்டணி(india alliance) சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து, திருப்பூர் ராயபுரத்தில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்,"நடைபெற இருக்கின்ற தேர்தல் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்குமான தேர்தல், சிபிஐ(CBI) மூலம் மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெற்ற கட்சி பாஜக. ராமர், இந்து என பேசும் பாஜக இந்து மக்களையும் ஏமாற்றி வருகின்றனர் என்றார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை பேசுகையில்,"பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழல்வாதிகளை விட மாட்டோம் என்றார். ஆனால் பாஜகவில் இணைந்தவர்கள் குற்ற வழக்குகள் முடித்துவைக்கபடுள்ளது. சிபிஐ, அலமக்கதுறை வைத்து மிரட்டி தங்கள் கட்சிக்கு இழுக்கிறார்கள். தொழில்துறையினர் அமலாக்கத்துறை மூலம் மிரட்டி நன்கொடை வாங்குகிறார்கள். தமிழகத்தில் வாக்கு கேட்கிறார் மோடி. தமிழ்நாட்டிற்கு இதுவரை என்ன செய்திருக்கிறார்.

தமிழகத்திற்கு எந்தவித திட்டங்களையும் செய்யாமல் துரோகம் செய்த மோடியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அதிமுகவையும் மன்னிக்க மாட்டார்கள். ஏப்ரல் 11, 12 தேதிகளில் ராகுல் காந்தி தமிழகத்திற்கு வந்து வாக்கு சேகரிப்பார்.

சீனாவின் தூதரக மோடி செயல்படுகிறார் என சுப்பிரமணி சுவாமி சொல்கிறார். வரலாறு தெரியாமல் பாஜகவினர் பொய்யை தெரிவித்து வருகின்றனர். சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக நின்றவர்கள் 40 ஆண்டுகளாக அவர்கள் கட்சி அலுவலகத்தில் இந்திய கொடி ஏற்றாமல் இருந்தவர்கள்.

50 ஆண்டுகளுக்கு முன் நடந்த கச்சத்தீவு விவகாரத்தை பேசும் அவர்கள் சமீபத்தில் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் சீன அரசாங்கம் 30 கிராமங்களுக்கு அவர்கள் பெயர்களை சூட்டி இருப்பதைப் பற்றிப் பேச பாஜகவுக்கு திராணி இருக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பினார்.

இந்தநிகழ்வின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர் சுப்பராயன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு வெள்ள நிவாரணம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு! - TN Govt Filed Suit

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.