சென்னை: மாநிலங்களவையில் நேற்று அரசியல் சாசனம் மீதான விவதாம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவர் தற்போது 'அம்பேத்கர், அம்பேத்கர்' என்று பேசுவது பேஷனாகி விட்டது. இப்படி சொல்வதற்கு பதிலாக கடவுளின் நாமத்தை பல முறை உச்சரித்திருந்தால், அவர்களுக்கு சொர்க்கமாவது கிடைக்கும்.
இருந்த போதும் அம்பேத்கர் பெயரை காங்கிரசார் சொல்வது பாஜகவிற்கு மகிழ்ச்சியை தருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியினர் உண்மையான உணர்வுகளுடன் செயல்பட வேண்டுமென்றார். இவரின் இந்த பேச்சு இந்தியா கூட்டணி மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) December 18, 2024
நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!#BabasahebAmbedkar
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: இதனைக் கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அதிக பாவங்கள் செய்பவர்கள் தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்; சொல்ல வேண்டும்," எனப் பதிவிட்டுள்ளார்.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்?
— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 18, 2024
எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை #அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை… pic.twitter.com/IkMrpjQVSc
திருமாவளவன்: புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்? எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார்.
அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம். அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள். புரட்சியாளர் அம்பேத்கர் ’விசுவரூபம்’ எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும்" என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : "அம்பேத்கரை அவமதித்த காங்கிரஸின் இருண்ட வரலாற்றை அமித்ஷா அம்பலப்படுத்தினார்" -பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் பதிவில் கூறியிருப்பது என்ன?
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்: சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,"அம்பேத்கர் போற்றுதலுக்குரியவர். மாபெரும் தலைவர் அவர் போற்றப்பட வேண்டுமே தவிர சிறுமைப்படுத்தப்படக் கூடாது. அம்பேத்கரை யார் சிறுமைப்படுத்துகிறார்களோ அவர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள். அந்த வகையில் அமித்ஷாவின் பேச்சு அக்கட்சிக்கு கடுமையான பின் விளைவுகள் ஏற்படுத்தும்" என தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
If the Congress and its rotten ecosystem think their malicious lies can hide their misdeeds of several years, especially their insult towards Dr. Ambedkar, they are gravely mistaken!
— Narendra Modi (@narendramodi) December 18, 2024
The people of India have seen time and again how one Party, led by one dynasty, has indulged in…
பிரதமர் மோடி : "கடந்த பத்து ஆண்டுகளாக, அம்பேத்கரின் கண்ணோட்டத்தை நிறைவேற்ற ஓய்வின்றி பாஜக அரசு உழைத்து வருகிறது. 25 கோடி மக்களை பசியில் இருந்து மீட்டது, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் சட்டத்தை வலுப்படுத்தியது.
பாஜக அரசின் தூய்மை இந்தியா, பிரதமரின் ஆவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் இயக்கம், உஜ்வாலா யோஜனா உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த ஒவ்வொரு திட்டங்களும் ஏழைகளின் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வாதாரத்துக்கு உதவிகரமாக இருக்கின்றன.
அம்பேத்கர் தொடர்பான பஞ்ச தீர்த்தங்களை முன்னெடுக்க பாஜக அரசு பணியாற்றி வருகிறது. கடந்த பல தசாப்தங்களாக சைத்யா பூமியின் நிலம் விவகாரம் நிலுவையில் இருக்கிறது. எங்களது அரசு அந்த பிரச்சினையைத் தீர்த்தது மட்டுமின்றி, நானும் அங்கு பூஜை செய்ய சென்றுள்ளேன்.
அம்பேத்கர் தமது வாழ்நாளின் கடைசி ஆண்டுகளில் வசித்த டெல்லி அலிப்பூர் சாலையில் உள்ள வீடு நினைவகமாக முன்னெடுக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். அதே போல லண்டனில் அவர் வசித்த இல்லத்தையும் மத்திய அரசு வாங்கி உள்ளது. அம்பேத்கர் என்று வரும்போது, நாங்கள் முழுமையான மரியாதை அளிக்கின்றோம்" என்று பதிவிட்டுள்ளார்.