சென்னை: உடல்நலக்குறைவால் மறைந்த முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளருமான மறைந்த முரசொலி செல்வம் (84) உடல் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடலை கட்டியணைத்து கதறி அழுந்தார்.
இதையடுத்து தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக பிரமுகர் அர்ஜுன மூர்த்தி, தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் மனைவி சங்கீதா, கவிஞர் வைரமுத்து, உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
கோபாலபுரம் இல்லத்தில் முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபோது கண்ணீர் சிந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்#MurasoliSelvam #CMMKStalin #Udhayanidhistalin #death #TamilnaduNews #DMK #ETVBharatTamilnadu pic.twitter.com/qMi9MgOoLw
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) October 10, 2024
அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "இன்று காலை எழுந்து பல் துலக்கி காபி குடித்துவிட்டு சிறிது நேரம் உறங்க செல்கிறேன் என்று சொன்னவர் சிற்றுண்டிக்கு எழுப்பும் பொழுது எழவில்லை என முதலமைச்சர் அவர்களே என்னிடம் தெரிவித்தார். முரசொலி செல்வம் அனைவருக்கும் வேண்டியவர். எதிர்க் கட்சியினரையும் அரவணைத்து செல்பவர்.
கோபாலபுரத்தில் தீபமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தார். இன்று நம்மையெல்லாம் சோகத்தில் அழைத்துச் சென்று விட்டார். திமுகவிற்கு முரசொலி இறப்பு பேரிழப்பாகும். அவரது புகழ் திராவிட இயக்க வரலாற்றில் அழியா புகழோடு நிலைத்து நிற்கும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க : காலமானார் முரசொலி செல்வம்! கருணாநிதியின் மருமகன், மாறனின் தம்பி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன மூர்த்தி, "அண்ணன் முரசொலி செல்வம் அரசியலுக்கு அப்பாற்பட்டு இனிமையாக பழகக்கூடியவர். சிறந்த எழுத்தாளர், பண்பாளர், அன்பின் உருவமானவர். மிகவும் நேசத்துடன் என்றும் உணர்ச்சி வசப்படாமல், கோபப்படாமல் அனைவரிடமும் இனிமையாக பேசக்கூடியவர். அத்தகைய உயர்ந்தவர் பிரிந்தது எனக்கும், என் குடும்பத்தாருக்கும் மிகப்பெரிய துன்பத்தை தந்தது" என தெரிவித்தார்.
பின்னர் பேசிய, திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், "தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னேற்றத்திற்காக தலைவரிடம் பேசி பல விஷயங்களை செய்துள்ளார். இவரது இறப்பு, தயாரிப்பாளர் சங்கத்திற்கும் திரை கலைஞர்களுக்கும் மிகப்பெரிய பேரிழப்பாகும். முரசொலி செல்வம் அவர்களுக்கு தயாரிப்பாளர், ஊடகவியலாளர் என பல முகங்கள் உண்டு" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்