ETV Bharat / state

ஆக.13ல் தமிழக அமைச்சரவை கூட்டம்.. துணை முதல்வர் பதவி குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல்! - cm stalin america visit

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 7, 2024, 2:34 PM IST

Tamil Nadu cabinet meeting: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மற்றும் தலைமை செயலகம் (கோப்புப்படம்)
முதல்வர் மற்றும் தலைமை செயலகம் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி கூடுகிறது. முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே நடைப்பெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு 6.64 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், இதன் மூலம் சுமார் 27 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழக முதல்வர் ஸ்பெயின் சென்று முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதன் தொடர்ச்சியாக, முதலீடுகளை தமிழகத்தில் ஈர்க்கும் வகையில் வருகிற 27ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ளார். அங்குள்ள முக்கிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்கும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆக உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் வருகிற 13ந் தேதி காலை 11.00 மணிக்கு நடைப்பெற உள்ளது. அமைச்சரவையில் விவாதிக்கப்படும் பொருள் குறித்த குறிப்பு தனியே அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக புதிதாக தமிழகத்தில் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, விரிவாக்கம் செய்ய உள்ள பெரு நிறுவனங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். முதலமைச்சர் வெளிநாடு செல்லும்போது அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டியது வழக்கமான நடைமுறையாக உள்ளது. அதன்படி, முதல் அமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாக உள்ள நிலையில் இவ்விவாகரம் குறித்தும் அமைச்சரவையில் பேசப்பட உள்ளதாகவும், அமைச்சரவை மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வரும் நிலையில் இவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அவதூறு வழக்கில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.