ETV Bharat / state

கோவையில் அண்ணாமலை போட்டி.. வெளியானது தமிழ்நாடு பாஜக வேட்பாளர் பட்டியல்! - Annamalai from Coimbatore

Annamalai from Coimbatore: பாஜக சார்பில் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 6:23 PM IST

Updated : Mar 21, 2024, 7:00 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. மொத்தம் 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். தென் சென்னையில் தமிழிசை செளந்தரராஜனும், நீலகிரியில் எல்.முருகனும் போட்டியிடுகின்றனர்.

அதேபோல், மத்திய சென்னையில் வினோஜ் பி.செல்வம், வேலூரில் ஏசி சண்முகம், கிருஷ்ணகிரியில் நரசிம்மன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், பெரம்பலூரில் பாரிவேந்தர் மற்றும் கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

முதலில் தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதில் திருத்தம் மேற்கொண்டு, நெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இவற்றில், கோவையில் திமுக சார்பில் கணபதி ப.ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ஜி.ராமச்சந்திரன் போட்டியிடுகின்றனர். அதேபோல், நெல்லையில் அதிமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் களம் காண்கிறார். மேலும், நீலகிரியில் ஆ.ராசா திமுக சார்பில் களம் காணும் நிலையில், லோகேஷ் தமிழ்ச்செல்வன் அதிமுக சார்பில் களம் காண்கிறார்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க ஓபிஎஸ் முடிவு? - வெளியில் இருந்து ஆதரவா? - OPS Seat Sharing

Last Updated : Mar 21, 2024, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.