ETV Bharat / state

பாமக 10 தொகுதிகளில் போட்டி.. பாஜக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டி? முழு விவரம்! - PMK contesting constituencies - PMK CONTESTING CONSTITUENCIES

BJP Alliance: தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் களம் காண்கிறது. மேலும், பாஜக மட்டும் 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 10:18 PM IST

Updated : Mar 21, 2024, 10:31 PM IST

சென்னை: 2024 மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை ஒட்டி, மாநிலத்தில் திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகின்றன. அந்த வகையில், திமுக தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்து, திமுக நேரடியாக களம் காணும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. அதேபோல், அதிமுகவும் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

இந்த நிலையில், பாஜக தலைமையிலான கூட்டணியில் கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, தமிழ்நாடு பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜக நேரடியாக களம் காணும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, பாஜக 19 தொகுதிகளில் நேரடியாக களமிறங்குகிறது. இதன் அடிப்படையில்,

  1. திருவள்ளூர்
  2. வட சென்னை
  3. தென் சென்னை
  4. மத்திய சென்னை
  5. கிருஷ்ணகிரி
  6. திருவண்ணாமலை
  7. நாமக்கல்
  8. திருப்பூர்
  9. நீலகிரி
  10. கோயம்புத்தூர்
  11. பொள்ளாச்சி
  12. கரூர்
  13. சிதம்பரம்
  14. நாகப்பட்டினம்
  15. தஞ்சாவூர்
  16. மதுரை
  17. விருதுநகர்
  18. திருநெல்வேலி
  19. கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

அதேபோல், பாட்டாளி மக்கள் கட்சிக்கு பாஜக கூட்டணியில் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி,

  1. அரக்கோணம்
  2. ஆரணி
  3. விழுப்புரம்
  4. காஞ்சிபுரம்
  5. சேலம்
  6. கள்ளக்குறிச்சி
  7. தருமபுரி
  8. மயிலாடுதுறை
  9. திண்டுக்கல்
  10. கடலூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.

அந்த வகையில், புதிய நீதிக்கட்சி வேலூர் மக்களவைத் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் மக்களவைத் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிடுகின்றன. இந்த நான்கு கட்சிகளும் தாமரை சின்னத்தில் களமிறங்குகின்றன.

மேலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இறுதியாக, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு (ஓ.பன்னீர்செல்வம் தரப்பு) ராமநாதபுரம் தொகுதியில் களம் காண்கிறது.

முன்னதாக, இன்று வெளியிடப்பட்ட தமிழ்நாடு பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலின்படி, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். தென் சென்னையில் தமிழிசை செளந்தரராஜன், நீலகிரியில் எல்.முருகன் போட்டியிடுகின்றனர்.

அதேபோல், மத்திய சென்னையில் வினோஜ் பி.செல்வம், வேலூரில் ஏசி சண்முகம், கிருஷ்ணகிரியில் நரசிம்மன் ஆகியோர் களம் காண்கின்றனர். மேலும், பெரம்பலூரில் பாரிவேந்தர் மற்றும் கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் நெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோவையில் அண்ணாமலை போட்டி.. வெளியானது தமிழ்நாடு பாஜக வேட்பாளர் பட்டியல்!

Last Updated : Mar 21, 2024, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.