சென்னை: சிக்கிம் மாநிலம் பாக்யோங்கில் வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் மத்தியப் பிரதேசம், மணிப்பூர், ஹரியானா மற்றும் தமிழகம் என வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்தவர் சுபேதார் கே.தங்கப்பாண்டியன் என்பது தெரியவந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பின்னாகுரியிலிருந்து பாக்யோங் நோக்கு நேற்று ராணுவ வீரர்களின் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. ரெனாக் - ரோங்லி என்ற சாலை பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்த போது, சாலையை விட்டு வாகனம் விலகிச் சென்று அருகே இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தைப் பார்த்த அப்பகுதியினர் உடனடியாகச் சென்று பார்த்த போது வாகனம் சுக்கு நூறாக நொறுங்கிக் காணப்பட்டுள்ளது. வாகனத்தில் பயணம் செய்த ராணுவ வீரர்களை மீட்க முயற்சி செய்த போது அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கப்பாண்டியன், மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீப் படேல். இம்பாலைச் சேர்ந்த பீட்டர், ஹரியானாவைச் சேர்ந்த நாயக் குர்சேவ் சிங் ஆகிய 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானது தெரிய வந்துள்ளது.
தமிழக ராணுவ வீரர் பலி: வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கே.தங்கப்பாண்டியன்(41). தற்போது இவர் சுபேதாராக பணியாற்றி வந்த இவருக்கு வளர்மதி என்ற பெண்ணுடன் திருமணமாகி, 6 மற்றும் 8 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த தங்கப்பாண்டியன் 20 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், கார் விபத்தி சிக்கி உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில் இவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
#GeneralUpendraDwivedi #COAS and All Ranks of #IndianArmy express deepest condolences on the demise of Subedar K Thangapandi, Naik Gursev Singh, Craftsman W Peter Singh and Sepoy Pradeep Patel who lost their lives in the line of duty in #Sikkim.#IndianArmy stands firm with the… https://t.co/2aXEOcpTgi
— ADG PI - INDIAN ARMY (@adgpi) September 6, 2024
சிக்கிமில் விபத்தில் சிக்கி மறைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், இந்த நேரத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு இந்திய ராணுவம் உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்