ETV Bharat / state

TN Agri Budget 2024: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024: முக்கிய அறிவிப்புகள் என்ன? - Tamil Nadu Agricultural budget

வேளாண் பட்ஜெட்
வேளாண் பட்ஜெட்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 9:48 AM IST

Updated : Feb 20, 2024, 12:06 PM IST

12:04 February 20

வேளாண் பட்ஜெட் ரூ.42,481 கோடி

2024 - 2025 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் ரூ.42,281.88 கோடி; கடந்த நிதியாண்டில் ரூ.38,904 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

11:32 February 20

விவசாயிகளுக்கு தரமான விதை கிடைக்க ஏற்பாடு

முன்னணி விதை நிறுவனங்களின் விதைகள் மாற்றுப் பெயரில் சந்தையில் வராமல் கண்காணித்து விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க செய்யும் வகையில் புதிய பதிவு முறை அறிமுகப்படுத்துவதோடு தனியார் நாற்றங்காலில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகள் நடவு பொருட்களின் தரம் அவற்றுக்கான விதைகள் பெறப்பட்ட இடம் ஆகியவை விதைச் சட்டத்தின்படி உறுதி செய்யப்படும்: அமைச்சர்

11:29 February 20

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன் ஒன்றிற்கு 215 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

11:27 February 20

குமரியில் சூரியத் தோட்டம்

கன்னியாகுமரியில் சூரியன் உதய புள்ளிக்கும் மறையும் புள்ளிக்கும் இடையில் ஒரு தோட்டம் அமைத்தால் பார்வையாளர்களை கவரும்; அதனை கருத்தில் கொண்டு கடற்கரை ஒரத்தில் ரூ.2 கோடி செலவில் சூரியத் தோட்டம் அமைக்கப்படும்: அமைச்சர்

11:25 February 20

சங்கரன்கோவிலில் அரசு தோட்டக்கலை பண்ணை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் நடுவக்குறிச்சி கிராமத்தில் 4 ஏக்கர் நில பரப்பில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்படும்: அமைச்சர்

11:18 February 20

விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை!

ஒருங்கிணைந்த விதைச்சான்றிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு வளாகம் கரூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அமைத்திடவும் விதை மரபணு தூய்மையை உறுதி செய்வதற்காக தானியங்கி மூன்றாம் தலைமுறை டிஎன்ஏ மார்க்கர் அடிப்படையிலான தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆய்வகத்தை கோயமுத்தூரில் அமைத்திடவும் தருமபுரி,காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய ஆறு விதை பரிசோதனை நிலையங்களுக்கு ( national accreditation board for testing and calibration laboratories) தரச் சான்றுகளை பெற்றிடவும் 2024 - 25 ஆம் ஆண்டில் ஒன்பது கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

11:10 February 20

சர்க்கரை அரவை நிறுத்தம் ஏற்படுவதை தடுக்க ரூ.6.31 கோடி

* கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை அரவை நிறுத்தம் ஏற்படுவதை தவிர்க்க ரூபாய் 6.31 கோடி ஒதுக்கீடு

*சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்த 12.51 கோடி நிதி ஒதுக்கீடு

*பெரம்பலூரில் ரூ.4 கோடியில் தொழில் நுட்ப வணிக மேம்பாட்டு மையம்; ரூ.50 கோடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

11:04 February 20

முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்பு திட்டம்

மா, பலா, வாழை சாகுபடி பரப்பை அதிகரிக்க முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்பு திட்டம் செயல்படுத்திட ரூ.41.35 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

11:04 February 20

தூத்துக்குடி விவசாயிகளுக்கு ரூ.14.55 கோடி இழப்பீடு

கடந்தாண்டு டிசம்பர் மாதம் தூத்துக்குடியில் பெய்த கனமழையால் பாதிக்கபட்ட 9,988 விவசாயிகளுக்கு விவசாயிகளுக்கு ரூ.14.55 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

10:53 February 20

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

கரும்பு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் சிறப்பு ஊக்கத்தொகை ஒன்றிய அரசு வழங்கும் நிதியுடன் 250 ஊக்கத்தொகை ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு:அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

10:51 February 20

பயிர் உற்பத்தி தன்னிறைவு

அனைத்து பயிர்களின் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் நோக்கத்தில் பயிர் பெருக்கு திட்டத்திற்கு 4,75,000 ஏக்கரில் 40 கோடியே 27 இலட்சம் ஒன்றிய மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தபடும்: அமைச்சர்

10:50 February 20

உணவு எண்ணெய் உற்பத்தி திட்டம்

விவசாயிகளுக்கு அதிக இலாபத்தை ஈட்டி கொடுக்கும் எண்ணெய் வித்து பயிர் வகைகளை பரவலாக்கம் செய்ய தொகுப்பு செயல் விளக்க திடல் அமைத்திடவும், எண்ணெய் பயிர் வகைகளின் சாகுபடியை ஊக்குவித்திடவும் 45 கோடி ரூபாய் ஒன்றிய மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் 2 இலட்சத்து 50 ஏக்கர் இத்திடம் செயல்படுத்தபடும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

10:44 February 20

கிராமங்களில் மண் பரிசோதனைக்கு ரூ6.27 கோடி ஒதுக்கீடு

*ஆடாதொடா,நொச்சி போன்ற தாவர வகைகளை நடவு செய்ய ரூ.1கோடி ஒதுக்கீடு

*2482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூபாய் 6.27 கோடி ஒதுக்கீடு

*5 லட்சம் லிட்டர் திரவ உயிர் உரங்கள் 10 லட்சம் ஏக்கருக்கு இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு வழங்கிய ரூபாய் 7.5 கோடி நிதி ஒதுக்கீடு

*சீவன், சம்பா போன்ற மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய நெல் ரகங்கள் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம்

*விவசாயிகள் கூடுதல் லாபம் பெற்றிட 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூபாய் 27 கோடி ஒதுக்கீடு

10:41 February 20

துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம்

துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ.17.50 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

10:36 February 20

தேனி வளர்ப்பு பயிற்சிக்கு ரூ.3.60 கோடி

1.வேளாண் உற்பத்தி பரப்பை அதிகரித்து, உற்பத்தியைப் பெருக்க 108 கோடி ஒதுக்கீடு.

2.பருத்தி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பருத்தி சாகுபடிக்கு ரூ.14.20 கோடி நிதி ஒதுக்கீடு

3.இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகள் மீண்டு வர பயிர் காப்பீடு திட்டம் ரூ.1,775 கோடியில் செயல்படுத்தப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

10:34 February 20

வேப்ப மர கன்றுகள் வளர்க்க ரூ.2 கோடி

பூச்சி நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மர கன்றுகள் இலவசமாக கொடுக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர்

10:33 February 20

வேளாண் காடு திட்டத்திற்கு ரூ.13 கோடி

தரமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் பொருட்டு வேளாண் காடு திட்டத்திற்கு ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

10:28 February 20

பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி

2 லட்சம் விவசாயிகள் பயனடைய 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட ரூபாய் 20 கோடி நிதி ஒதுக்கீடு

10:28 February 20

வேளாண் கிடங்குகள் அமைப்பு

விளைபொருட்களில் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பை தடுக்க ஏதுவாக கிடங்குகள் அமைப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

10:26 February 20

முதலமைச்சர் பெயரில் புதிய திட்டம் அறிமுகம்

'முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' பெயரில் புதிய திட்டம் அறிமுகம்; இதற்காக ரூ.206 கோடி ஒதுக்கீடு

10:23 February 20

மண்புழு உரம் தயாரிக்க ரூ.6 கோடி

மண்புழு உரம் தயாரிக்க 10 ஆயிரம் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு தலா 2 மண்புழு தொட்டிகள் வழங்க ரூ.6 கோடி ஒதுக்கீடு: அமைச்சர்

10:21 February 20

தென்காசி விவசாயிகளுக்கு நிவாரணம்

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை குறைவால் ஏற்பட்ட மகசூல் குறைவு 2,74,000 விவசாயிகளுக்கு 208 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர்

10:21 February 20

விவசாயிகளுக்கு நிவாரணம்

தமிழ்நாட்டில் கடந்த மாண்டஸ் புயல், பருவம் தவறி பெய்த மழை போன்ற இயற்கை பேரிடர்களால் பாதித்த விவசாயிகளுக்கு 380 கோடியே 40 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது:அமைச்சர்

10:21 February 20

வேளாண் விற்பனை அதிகரிப்பு

ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், உழவர் சந்தைகள் மூலம் விற்பனை அதிகரிக்கப்பட்டு வருகிறது: அமைச்சர்

10:16 February 20

25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு

25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.4,436 கோடி பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

10:13 February 20

விவசாய சாகுபடி பரப்பு அதிகரிப்பு

விவசாய சாகுபடி பரப்பு 155 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

10:11 February 20

"உழவர்கள் வளர்ச்சிக்கான பட்ஜெட்"

உழவர்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் வேளாண் பட்ஜெட் தயாரிக்கபட்டுள்ளது:அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

10:10 February 20

வேளாண்மையில் இளைஞர்களின் பங்கு அவசியம்

விவசாயம் மேம்பட இளைஞர்கள் வேளாண் துறையில் அதிக அக்கறையோடு ஈடுபட வேண்டும்: அமைச்சர்

10:08 February 20

2 ஆண்டுகளில் 1.5 லட்சம் இலவச மின் இணைப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளில் 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

10:03 February 20

வேளாண் பட்ஜெட் தாக்கல்

சட்டப்பேரவையில் வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

09:49 February 20

கடந்த பட்ஜெட்டில் ரூ.38,904 கோடி

கடந்த நிதியாண்டில் வேளாண் துறைக்கு ரூ.38,904 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு கூடுதல் நிதி ஒதுக்க வாய்ப்பு

09:48 February 20

விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் புதிய அறிவிப்புகள்..

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

09:37 February 20

இன்னும் சற்று நேரத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல்

தமிழ்நாடு அரசின் வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

Last Updated : Feb 20, 2024, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.