ETV Bharat / state

குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு.. நெல்லை சிறுவன் சடலமாக மீட்பு - Tenkasi Courtallam flood - TENKASI COURTALLAM FLOOD

Courtallam Heavy Flood: தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குற்றாலம் வெள்ளப்பெருக்கு புகைப்படம்
குற்றாலம் வெள்ளப்பெருக்கு புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 3:39 PM IST

Updated : May 17, 2024, 7:00 PM IST

குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வீடியோ (Credits: ETV Bharat Tamil Nadu)

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் காலையிலிருந்து வெளுத்து வாங்கும் கனமழையினால், குற்றாலம் ஐந்தருவி பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பழைய குற்றாலம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு குளித்துக் கொண்டிருந்த சிலர் வெள்ளத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது அங்கு குளித்துக் கொண்டிருந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, பழைய குற்றாத்தில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நெல்லையைச் சேர்ந்த அஸ்வின் (17), இன்று சேர்வன்வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளார். சம்பவ இடத்திற்கு நேரில் சென்றுள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தலைமையில், சிறுவனைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்நிலையில், பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீரென வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் கனமழை மற்றும் மிகவும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அந்தவகையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளான ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் அலறடித்துக் கொண்டு ஓடி உள்ளனர்.

இதில் நெல்லையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அஸ்வின் என்ற சுற்றுலா பயணி வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக கண்டுடெடுக்கப்பட்டார். பழைய குற்றாலம் அருவியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் நேரடி ஆய்வு பணியில் மேற்கொண்டனர். மேலும், இந்த காட்டாற்று வெள்ளத்தில் வேறு யாரேனும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனரா? என்று உள்ளூர் வாசிகளின் உதவியுடன் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கோவை, நெல்லையில் வெளுத்து வாங்கிய மழை.. 300 வீரர்களுடன் 10 பேரிடர் மீட்புக்குழு தயார்! - SDRF Actions In TN

Last Updated : May 17, 2024, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.