ETV Bharat / state

மண்டபத்தில் இயங்கும் வேளாண் கல்லூரி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள் கூறியது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 5:43 PM IST

Agri College Students Protest: கரூர் அரசு வேளாண்மை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மார்ச் 7ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், கல்லூரி அருகே உள்ள கரூர் - திருச்சி நெடுஞ்சாலை உழவர் சந்தை பகுதியில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட கரூர் அரசு வேளாண்மை கல்லூரி மாணவர்கள்

கரூர்: கரூர் அரசு வேளாண்மை கல்லூரி துவங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில், கல்லூரிக்குத் தேவையான ஆய்வுக்கூடங்கள், பேராசிரியர்களின் எண்ணிக்கை, வேளாண்மை ஆய்வு நடத்த வேளாண் விளைநிலங்கள், மாணவர்கள் தங்கிப் பயில விடுதி வசதிகள் ஆகியவை ஏற்படுத்தி தராமல், அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பொறுப்பு அலுவலர் முனைவர் பாலசுப்பிரமணியன், நடைபெற்ற பெற்றோர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் பெற்றோர் கல்லூரி பொறுப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, தன்னால் எதுவும் செய்ய முடியாது என அவர் கூறியதால், கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் மதியம் 2 மணி அளவில் அமர்ந்து, மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மாணவர்களின் போராட்டம் குறித்து அறிந்து வந்த கரூர் மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் ராஜா கனகராஜ், பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், தங்கள் கோரிக்கையை தமிழக அரசுதான் நிறைவேற்ற வேண்டும் என கல்லூரி மேற்பார்வை அலுவலர் கூறுவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல் ஆகியோர் கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் மற்றும் பெற்றோரை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் மாணவர்களின் முக்கிய கோரிக்கையான ஆய்வக வசதி, நூலக வசதி, போதிய பேராசிரியர்கள் நியமனம், வேளாண் கல்வியை போதிப்பதற்கு போதிய விவசாய நிலம் ஆகியவை குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் கலைந்து சென்றனர். கரூர் வேளாண்மை கல்லூரியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இது குறித்து ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த வேளாண் கல்லூரி மாணவிகள், “கரூர் வேளாண்மை கல்லூரியில் வெறும் வகுப்பறை பாடங்கள் மட்டுமே நடத்தப்படுகிறது. குறைந்த அளவிலான ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு மாணவர்கள் கோரிக்கையை ஏற்று கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

ஆனால் இரண்டு ஆண்டுகளாக படிக்கும் மாணவர்களுக்கு போதிய ஆய்வகம், பேராசிரியர்கள் போன்ற கோரிக்கைகளை மாணவர்கள் தரப்பிலும் பெற்றோர் தரப்பிலும் பல முறை வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அனைத்து கட்டணங்களையும் தனியார் கல்லூரிக்கு நிகராக அரசு வேளாண் கல்லூரியில் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் போதிய அடிப்படை வசதிகளை வழங்க கல்லூரி மேற்பார்வை அதிகாரி நடவடிக்கை மேற்கொள்வதில்லை. அனைத்துக்கும் அரசு தான் செய்து கொடுக்க வேண்டும் என மெத்தனமாக கூறுகிறார். எனவே மாணவர்கள் கல்வி நலன் கருதி உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: "நாங்கள் ஏன் ஓட்டு போட வேண்டும்?” - கரூர் வடக்குபாளையம் கிராமத்தினரின் கொந்தளிப்புக்கு காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.