ETV Bharat / state

புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு.. முதல் நாளே பள்ளிகளுக்கு விடுமுறை! - PUDUCHERRY SCHOOL REOPEN - PUDUCHERRY SCHOOL REOPEN

PUDUCHERRY SCHOOL REOPEN: புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு பூ, இனிப்புகள் மற்றும் புத்தகங்கள் வழங்கி ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு ஆர்வமுடன் சென்ற மாணவர்கள்
கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு ஆர்வமுடன் சென்ற மாணவர்கள் (Credit -ETVBharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 3:11 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பள்ளிகளில் ஆண்டுத் தேர்வுகள் முடிவடைந்து, 29ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதுச்சேரியில் இருந்த கடுமையான வெயில் காரணமாக கோடை விடுமுறையானது ஜூன் 11 வரை நீடிக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று (ஜூன் 12) முதல் புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவ - மாணவிகளை பள்ளியின் ஆசிரியர்கள் இனிப்பு மற்றும் பூக்கள் கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. மேலும், பள்ளி திறக்கும் இன்றைய நாளே மாணவர்களுக்கான சீருடை, புத்தகம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், சாரம் அரசு தொடக்கப் பள்ளியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பள்ளி துணை ஆய்வாளர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் மாணவ, மாணவிகளை வரவேற்று இனிப்பு மற்றும் புத்தகங்களை வழங்கினர். புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்பி பாடத்திட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் விஷ வாயு தாக்கிய புதுநகர் பகுதியில் இயங்கும் இரு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், புதுநகர் 6வது தெருவில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளி இன்று திறக்கப்பட்ட நிலையில், நான்கு மாணவர்களே பள்ளிக்கு வந்துள்ளனர். இதனால் மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு பள்ளிக்கும் விடுமுறை விடுக்கப்பட்டது. மேலும், அதே பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கும் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விளவங்கோடு எம்எல்ஏ-வாக தாரகை கத்பர்ட் பதவியேற்பு.. ஸ்டாலின், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வாழ்த்து! - Tharahai Cuthbert

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.