ETV Bharat / state

கோவை தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் உயிரிழப்பு.. போலீசார் விசாரணை! - Student died in Coimbatore - STUDENT DIED IN COIMBATORE

Student died after fainting in restroom: கோயம்புத்தூர் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் தனுஷ் என்ற மாணவர் கல்லூரி விடுதியிலுள்ள கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

student-died-after-fainting-in-restroom-of-a-private-college-hostel-in-coimbatore
கோவை தனியார் கல்லூரி விடுதியிலுள்ள கழிவறையில் மயங்கி விழுந்து மாணவர் பலி!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 9:26 PM IST

கோயம்புத்தூர்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த தனுஷ் என்பவர், கோயம்புத்தூர் பாலக்காடு சாலையில் உள்ள குனியமுத்தூர் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். இந்த நிலையில், விடுமுறை நாளான இன்று (மே.1), விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர் தனுஷ், சக மாணவர்களுடன் விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மைதானத்திலிருந்து விடுதியின் கழிவறைக்கு மாணவர் சென்ற பொழுது, திடீரென அங்கு மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதில், தலைப் பகுதியில் மாணவர் தனுஷிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர் மயக்கம் அடைந்த தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம், அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாகக் கூறவே, மாணவரின் உடலை கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் மாணவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மாணவர் தனுஷ் மரணம் குறித்து கல்லூரி நிர்வாகம் உரிய முறையில் தெரிவிக்கவில்லை என மாணவரின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், கல்லூரியில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை எனவும், மாணவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வருவதற்கே நீண்ட நேரம் ஆகிவிட்டதாகவும், அதன் பின்னர் தனியார் மருத்துவமனைகள் ஒவ்வொன்றிற்காக அழைத்துச் சென்ற நிலையில், மாணவரின் உயிர் பிரிந்துவிட்டதாகவும், கல்லூரியில் சிறப்பாக படிக்கக்கூடிய மாணவர் தனுஷ் என அவரது பெற்றோர் தெரிவித்தனர். கல்லூரியில் வளாகத்தில் முதலாம் ஆண்டு மாணவர் உயிரிழந்தது குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போன்று, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த மாணவி ஒருவர், கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில், இன்று காலை கல்லூரியில் தற்கொலைக்கு முயன்ற நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்கொலை தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 என்கிற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது சிநேகா உதவி எண்ணுக்கு (044-24640050) அழையுங்கள். மேலும், இணைய வழித் தொடர்புக்கு (022-25521111) என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள help@snehaindia.org எனும் மின்னஞ்சல் முகவரியிலும், நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028 என்கிற முகவரிக்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: சொத்துக்காக பெற்றோரை கொலை செய்தால் வாரிசுகளுக்கு சொத்தில் உரிமை உள்ளதா? சட்ட வல்லுநர்கள் கூறுவது என்ன? - Parents Murder For Property

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.