ETV Bharat / state

கோவையில் மீண்டும் ஓர் பயங்கரம்.. பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. வீடியோ எடுத்து மிரட்டிய காதல் மன்னன் சிக்கியது எப்படி? - coimbatore sexual threat case - COIMBATORE SEXUAL THREAT CASE

coimbatore college student sexual case: கோவையில் மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி பாலியல் தொல்லை தந்ததாக கல்லூரி மாணவர்கள் இருவர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட  ஸ்ரீ தர்ஷன்
கைது செய்யப்பட்ட ஸ்ரீ தர்ஷன் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 12:42 PM IST

கோயம்புத்தூர்: கோவை பாலக்காடு சாலை குனியமுத்தூர் பகுதியில் பிரபல தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்தக் கலைக் கல்லூரியில் , நாகர்கோவிலை சேர்ந்த ஸ்ரீ தர்ஷன் என்பவர் எம்.ஏ இரண்டாம் ஆண்டு ஆங்கிலம் படித்து வருகிறார்.

இந்த நிலையில், இவர் அந்தக் கல்லூரியில் தன்னுடன் படித்த 21 வயதான மாணவியை காதலித்துள்ளார். மேலும், ஸ்ரீதர்ஷன் அந்த மாணவிக்கு தெரியாமல் அதே கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்த மற்றொரு மாணவியையும் காதலித்து வந்துள்ளார்.

காதல் மன்னன் ஸ்ரீ தர்ஷன்: இந்த நிலையில், ஸ்ரீ தர்ஷன் இரு மாணவிகளையும் பாலியல் ரீதியாக பயன்படுத்தி துன்புறுத்தல் செய்ததுடன் அவற்றை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார். இது மட்டுமில்லாமல், அதே கல்லூரியில் படிக்கும் மூன்றாவது மாணவி ஒருவரையும் ஸ்ரீ தர்ஷன் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

இந்த விவகாரம் மற்ற இரு மாணவிகளுக்கும் தெரிய வந்தது. இதுகுறித்து மாணவிகள் ஸ்ரீதர்ஷனிடம் கேட்டபோது, அவர்களை மிரட்டியதுடன் அந்தரங்க வீடியோக்கள், புகைப்படம் ஆகியவற்றை வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியுளார்.

இதனையடுத்து 21 வயதான கோவையை சேர்ந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் , ஸ்ரீ தர்ஷன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதே போல அதே கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவியும் மாணவர் தர்ஷன் மீது புகார் அளித்துள்ளார்.

இரு மாணவிகளும் கொடுத்த புகாரின் பேரில் மாணவர் ஸ்ரீ தர்ஷன் மீது இரு தனித்தனி வழக்குகளாக 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த குனியமுத்தூர் காவல்நிலைய போலீசார் மாணவர் ஸ்ரீ தர்ஷனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கல்லூரியில் ப்ளே பாயாக வலம் வந்த ஸ்ரீ தர்ஷன், மாணவிகளை காதலித்து ஏமாற்றியதுடன் அவர்களை வீடியோ எடுத்து வைத்து மிரட்டிய நிலையில் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவிக்கு தொந்தரவு: இந்நிலையில் இதே கல்லூரியில் டேட்டா சயின்ஸ் படிக்கும் ஜுனைத் என்ற மாணவரிடம் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் 'சினேப் சாட்' ஆப் மூலம் அறிமுகமாகியுள்ளார். அந்த மாணவிக்கு ஜுனைத் லவ் டார்ச்சர் கொடுத்து மிரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து பள்ளி மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஜுனைத்தை கைது செய்த குனியமுத்தூர் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவரின் செல்போனில் பல பெண்களின் ஆபாச படம் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த மாணவர் மீது பாலியல் தொல்லை கொடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த விவகாரம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கல்லூரி மாணவிகளை ஏமாற்றி பாலியல் ரீதியான வீடியோக்களை எடுத்து வைத்து மிரட்டி சிக்கிய ஸ்ரீ தர்ஷனின் வலையில் வேறேதேனும் மாணவிகள் விழுந்துள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரேக் அப் செய்த டியூஷன் மிஸ்.. 17 வயது சிறுவனின் 'கேஷ் ஆன் டெலிவரி' டார்ச்சர்.. சென்னையில் வினோத சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.