சென்னை: சென்னை இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கலைஞர் 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதை அரசியலாகப் பேசுகிறார்கள். பாஜகவும், திமுகவும் எதிரும், புதிருமாக கருத்துக்களுடன் களத்தில் உள்ளது. கருணாநிதிக்கு சிறப்பு நாணயம் வெளியிட்டத்தில் மகிழ்ச்சி அடைகிறோம்.
காமராஜர், அண்ணா, ராதாகிருஷ்ணன், எம்ஜிஆர் ஆகியோருக்கு எல்லாம் நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தை ஆளும் திமுக அரசு சார்பில் கருணாநிதி நூற்றாண்டு நாணயம் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
Women entrepreneurs are the engine that drives the Indian economy forward. FICCI Flo remains at the forefront as a forum for women professionals from various fields, and delighted to have had the opportunity to meet and interact with them on transformative leadership in Chennai… pic.twitter.com/miUq1BCBxQ
— K.Annamalai (@annamalai_k) August 19, 2024
அதன் அடிப்படையில், மத்திய அரசு அதற்கான அனுமதியை வழங்கியது. திமுகவும் - பாஜகவும் ஒரே மேடையில் இருந்ததை அதிமுக பொதுச் செயலாளர் அரசியல் கலந்து பேசுவது வேதனையாக உள்ளது. பாஜக ஆட்சியில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்றெல்லாம் பார்க்கவில்லை.
எதிரும், புதிருமாக இருந்தாலும் ஒரு அரசியல் தலைவரை மதிப்பது அரசியல் நாகரிகம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பற்றி என்னுடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்பை கட்சியிடம் சொல்ல முடியாது. நான் கட்சியின் தலைவராக இருந்தாலும், அடிப்படையில் நான் தொண்டன்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என மத்திய அரசு முடிவு செய்த பிறகு, மாநில பாஜக முழு ஒத்துழைப்பை கொடுப்பது கடமை. இதில், நாங்கள் அரசியல் கலக்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு விஷயத்தை உணர்த்த விரும்புகிறேன்.
எதிரும், புதிருமாக இருந்தாலும் அரசியல் நாகரிகம் வேண்டும். ஒரு தலைவரை மதிப்பது தான் அரசியல் நாகரிகம். மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களின் விருப்பத்தின்படி கலைஞரின் நினைவிடத்திற்கு சென்றோம். அரசியல் கலக்காமல் பெருந்தன்மையோடு செயல்பட்டுள்ளோம். அரசியல் நாகரிகத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் கட்சியாக பாஜக உள்ளது. சித்தாந்த அடிப்படையில் பாஜகவும், திமுகவும் எதிரும், புதிருமாக பயணம் செய்து கொண்டு வருகிறோம்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு, ஆட்சி இல்லாத போது ஒரு பேச்சு என பேசுகிறார். ஆட்சியில் இருக்கும்போது மத்திய அரசிடம் நிதிகளை பெற்று மாநில அரசாங்கம் செய்தது என பேசியவர் எடப்பாடி பழனிசாமி.
திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கை விட என் மீது ஐந்து மடங்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிணற்றுத் தவளை போல எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டு உள்ளார். எடப்பாடி பழனிசாமி அவர்களுடைய அரசியல் புரிதல் இப்படித்தான் உள்ளது.
ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் சமரசம் செய்வது எனது வேலை கிடையாது. கடந்த 1980 ஆம் ஆண்டிலிருந்து அரசியல் சூழ்நிலை தற்போது தமிழகத்தில் இல்லை. மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை வரவேண்டும். எடப்பாடி பழனிசாமியிடம் பெட்டர் பொலிடிகல் மெச்சூரிட்டியை எதிர்பார்க்கிறேன்.
நாளை ஜெயலலிதா அவர்களுக்கு இதுபோன்று விழா கொண்டாடும் போது, இதே போன்று ஈபிஎஸ் செயல்பட முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் முதலமைச்சராக வந்துள்ளார். ரகசிய உறவு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா? எடப்பாடி பழனிசாமி மனதில் எவ்வளவு அழுக்கு உள்ளது. அவரது மனதில் அவ்வளவு சாதிய வன்மம் உள்ளது. எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதியானவரா? முதலமைச்சராக இருந்த ஒருவர் இவ்வாறு பேச முடியுமா?
எம்ஜிஆர் அவர்களுக்கு இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை கொண்டாட தவறியது (அதிமுக) நீங்கள் செய்த தவறு.
கலைஞர் நாணய வெளியீட்டு விழாவை, கருணாநிதியின் புகழ் நாடு முழுவதும் பரவ திமுக பயன்படுத்திக் கொண்டார்கள்.
மாற்ற சிந்தாதத்தில் உள்ள தலைவராக இருந்தாலும், தமிழக மக்களின் நலனுக்காக சேவை செய்தவர்களுக்கு நாங்கள் மரியாதை செலுத்துவோம். தமிழக பாஜக ஜன்னலை திறந்து வைத்துள்ளது. மாற்று சித்தாந்தங்கள் உள்ளே வரட்டும், வெளியே போகட்டும். ஆனால் எங்கள் கால் நிலையாக உள்ளது" என பேசினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: “சமஸ்கிருதத்தில் இருந்து தான் கலாச்சாரம் தோன்றியது” - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு! - RN Ravi about Sanskrit