ETV Bharat / state

கோயில் வணிக நடவடிக்கைகளுக்கான இடம் அல்ல.. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி! - High Court Madurai Bench - HIGH COURT MADURAI BENCH

Srirangam Temple Prasadam Stall tender issue: கோயில் வணிக நடவடிக்கைகளுக்கான இடம் அல்ல என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது எனவும், மனுதாரர் தனது ஜிஎஸ்டி பதிவைப் புதுப்பிக்க வில்லை என்ற காரணத்தால் தான் அவர் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும் வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 7:38 AM IST

மதுரை: திருச்சியைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் பிரசாதம் வழங்க வைஷ்ணவ சம்பிரதாயத்தை சார்ந்தவர்கள் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்ற கோயில் நிர்வாக ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரியும் வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தியின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, "டெண்டர் அறிவிப்பில் வைஷ்ணவ சம்பிரதாயத்தை சார்ந்தவர்கள் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும். கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. வைஷ்ணவ திருக்கோயிலில் 10 ஆண்டுகள் பிரசாத கடை டெண்டர் எடுத்து நடத்தியதற்கான முன் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுதாரர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தகுதிகள் இருப்பினும் வைஷ்ணவ சமூகத்தைச் சாராதவர் என்பதால் அவரால் ஏலத்தில் கலந்து கொள்ள இயலவில்லை. ஆகவே டெண்டர் அறிவிப்பை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளார்" என்றார்.

அதற்கு மனுதாரர் தரப்பில் "பிரசாத கடை நடத்துவது, மதத்தின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல. அது மதச்சார்பற்ற தன்மை கொண்டது. இது மத நடைமுறையின் வரம்பிற்குள் வரவில்லை. ஆனால் வணிக நோக்கில் கோயிலினுள் கடையை நடத்தும் ஒரு நிகழ்வு. ஆகவே டெண்டருக்கான விதிகளை நீக்க வேண்டும்" என வாதிடப்பட்டது

தொடர்ந்து ரங்கநாத சுவாமி திருக்கோயில் தரப்பில், "ஸ்ரீரங்கம் கோயில் ஒரு வைஷ்ணவ கோயில். ஆகவே இங்கு தென்கலை சம்பிரதாயம் பின்பற்றப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ, சாதியையோ குறித்த பாகுபாடு இல்லை. ஏற்கனவே நிறுவப்பட்ட பழக்கவழக்கங்களை நீர்த்துப்போகச் செய்யக்கூடாது என்பதற்காகவே அந்த தகுதி வைக்கப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "கோயில்களில் பிரசாதங்கள் கடவுளின் ஆசீர்வாதமாகக் கருதப்படுகிறது. அந்த நம்பிக்கையிலேயே பக்தர்கள் பிரசாதங்களை பெற்றுச் செல்கின்றனர். ஒவ்வொரு கோயிலும் தங்கள் கோயிலுக்கு என தனித்துவமான பிரசாதங்களை வழங்குகின்றன. இந்து சமய அறநிலையத்துறை பிரசாத கடைகளை, தனி நபர்களுக்கு குத்தகைக்கு விடுகிறது. திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம், அழகர் கோயில் தோசை போன்றவை தனித்துவமான சிறப்பை கொண்டவை.

பிரசாதம் வழங்குவது இந்து சமய அறநிலையத்துறை தனியாரை பிரசாதங்களை விற்பனை செய்ய ஏன் அனுமதிக்கிறது எனத் தெரியவில்லை. இந்து சமய அறநிலையத்துறையே தரமான முறையில் பிரசாதங்களை தயாரித்து பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யலாம். பிரசாத கடைகளை, வணிக நோக்கிலான தனியாருக்கு குத்தகைக்கு விடும் கோயில் நிர்வாகம் பிரசாதத்தின் தரத்தினை எவ்வாறு உறுதி செய்கிறது என்பதும் தெரியவில்லை.

கோயில் வணிக நடவடிக்கைகளுக்கான இடம் அல்ல என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. மதுரை கள்ளழகர் கோயிலில் பிரசாதம் கோயில் நிர்வாகத்தாலே தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. கோயில் நிர்வாகமே பிரசாதத்தை தயாரித்து வழங்குவதால் கோயிலின் வருமானம் அதிகரிக்கிறது. இந்தியா பலவிதமான கோயில்களால் அழகுடன் காணப்படுகிறது. இந்த கோயில்கள் நம் நாட்டை மத ரீதியாக வளமாக்குவது மட்டுமல்லாமல், வரலாற்றுப் பெருமையையும் நிரப்புகிறது.

அவை கட்டடக்கலை அதிசயங்களாக மட்டுமின்றி, இந்தியா முழுவதிலுமிருந்து மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. இந்து மதத்தில் உள்ள கோயில்கள் மத வழிபாடு மற்றும் சமூக தொடர்புகளின் மையங்கள். இவை வழிபாட்டின் ஒரு பகுதியாக இருப்பதோடு பக்தர்களுக்கு நிறைவையும் தருகின்றன. ஆகவே இந்து சமய அறநிலை துறைக்கு உட்பட்ட கோயில்களில் பிரசாதங்களை கோயில் நிர்வாகமே தயாரித்து வழங்க முன் வர வேண்டும்.

இந்த வழக்கைப் பொருத்தவரை ஒவ்வொரு கோயிலுக்கும் வெவ்வேறு விதமான வழிபாடு நடைமுறைகள், ஆகம விதிகள் உள்ளன. இந்த வழக்கில் மனுதாரர் தனது ஜிஎஸ்டி பதிவை புதுப்பிக்கவில்லை. அதன் காரணமாகவே அவர் டெண்டரில் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை. ஆகவே, அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: அனுமந்த பட்டா வழங்கியதில் முறைகேடு; மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.