ETV Bharat / state

2026 சட்டமன்றத் தேர்தல்: முதல் ஆளாக தேர்தல் பணியை தொடங்கிய திமுக.. முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன? - ASSEMBLY ELECTION 2026

2026ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக 234 தொகுதிகளிலும், தொகுதி பார்வையாளர்களை நியமித்து பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் துரை கருணா கருத்து தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ், அண்ணாமலை, விஜய்
மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ், அண்ணாமலை, விஜய் (Credits - udhay, eps, annamalai, vijay X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2024, 9:50 PM IST

சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலானது மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது எனலாம். திமுக, அதிமுக, பாஜக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலில் களம் காண்பதால், ஐந்து முனை போட்டியாக அமைய வாய்ப்பு இருக்கின்றது.

இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக தனது தேர்தல் பணியினை முதன்முதலில் தொடங்கி உள்ளது. அதன்படி, 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது. இந்த தொகுதி பார்வையாளர்கள் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் உள்ளிட்ட தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து, மேற்பார்வையிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக தொகுதி பார்வையாளர்கள் நியமனம் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் துரை கருணா, "மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தொடர்ந்து ஆட்சியை பிடித்துள்ளனர். அதேபோல் திமுகவும் தொடர்ந்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். 234 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர் யார் என்பதற்கான அடையாளம் காணும் பணியும் துவங்கியுள்ளது.

தனித்து நிற்கும் ஆசை வந்துவிட்டதா?: சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் இடம், ஆட்சியில் பங்கு என்பது எல்லாம் திமுக கூட்டணி கட்சிகள் பேச துவங்கி விட்டது. ஒருவேளை கூட்டணிக் கட்சிகள் ஏதேனும் பிரச்னை செய்தால் தனியாக கூட நிற்க தயராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவில்லை என்றாலும் கூட, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வந்துவிட்டது. வழக்கமாக தேர்தல் பணியை 6 மாதம் முன்னர் தான் துவங்குவார்கள். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 40க்கு 40 வெற்றி பெற்ற கொண்டாட்டத்திலேயே அடுத்த கட்ட நகர்வுக்கு வந்துவிட்டார்கள்.

தோல்விக்கு காரணம் இபிஎஸ்?: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என அனைவரும் கூறினாலும் அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை, எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை பிடிவாதமாக இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல், வரும் சட்டமன்றத் தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய தோல்வி தான் ஏற்படும்.

திமுக ஆளும் கட்சியாக இருக்கிறார்கள் கூட்டணியும் பலமாக உள்ளது. ஒரு வேளை கூட்டணி இல்லை என்றாலும் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்துள்ளார்கள். திமுகவிற்கு சமமாக களம் காணும் வகையில் அதிமுக இல்லை. தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவை 10 - 15 % வாக்குகள் பெறலாமே தவிர, வெற்றி பெறுவதற்கான 35 - 40 % வாக்குகள் வாங்கும் வாய்ப்பு இல்லை.

திமுக கூட்டணியுடன் நின்றால் கூட்டணி வாக்குகள், திமுக வாக்குகள் ஒன்றாக ஒருங்கிணைந்து வந்துவிடும் என்பதாலும், திமுக எதிரான வாக்குகள் பல பிரிவுகளாக அதிமுக, பாஜக, நாதக, தவெக என சென்றுவிடும் என்பதாலும் திமுக எளிதாக வெற்றி பெற்றுவிடும்.

இதையும் படிங்க : 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போவே வேட்பாளரை அறிவித்த கட்சி.. ஆனா திமுகவுடன் கூட்டணி கிடையாதாம்!

பார்வையாளர்களின் வேலை என்ன?: 234 தொகுதி பார்வையாளர்களும் அரசின் திட்டம் அந்த தொகுதியில் எப்படி சென்றுள்ளது. அந்த தொகுதியில் உள்ள தகுந்த வேட்பாளர்கள் யார் என்பதையும் திமுக தலைமையிடம் அறிவிப்பார்கள்.

திட்டங்கள் மூலம் வாக்கு: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலமாக, 80% மகளிர் வாக்குகள் திமுகவிற்கு செல்கிறது. இளம் வாக்காளர்களைக் கவர மாணவ - மாணவியருக்கான மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சிறுபான்மையினர், தலித் வாக்குகள் திமுகவிற்கு வந்துவிடும். சரியான திட்டமிடல், வியூகம், 2026ல் மீண்டும் திமுக ஆட்சி என்பதை உறுதிபடுத்துவதற்கான பணியில் முழுவீச்சில் திமுக இறங்கிவிட்டது.

அதிமுக தேர்தல் நிலைப்பாடு என்ன? : எடப்பாடி பழனிசாமி உட்கட்சி பிரச்னையை சமாளிக்கவே மிகவும் சிரமம் கொள்கிறார். அனைவரையும் ஒன்றிணைக்க எடப்பாடி தயாராக இல்லை, வெளியே சென்ற 8% வாக்குகளை கொண்டு வந்தால் அதிமுக வெற்றி பெறலாம். அதை எடப்பாடி கேட்கவில்லை. பாஜகவை பொறுத்தவரையில் ஒன்றிணைந்த அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை வைத்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என அவர்கள் நினைக்கின்றனர்.

அண்ணாமலை வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு தான் அவர்கள் வியூகம் தெரியும். 2026ல் திமுக வெற்றி பெறுவதற்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது. ஒருங்கிணைந்த வலிமையான அதிமுக கூட்டணியை பலப்படுத்தினால் ஆட்சி மாற்றம் கொண்டுவரலாம். அப்படி இல்லை என்றால் திமுகவிற்கு தான் வாய்ப்புள்ளது.

3 ஆண்டுகால திமுக ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலையை வேகப்படுத்தி ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி மக்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்பதை அதிமுக காண்பிக்கவில்லை. இப்படி இருந்தால் எப்படி வெற்றி பெற முடியும்?.

களம் இறங்கும் விஜய்: தனித்த செல்வாக்கு, மக்கள் ஆதரவு எப்படி உள்ளது என்பதைக் காண தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் களம் இறங்குகிறார். விஜய் ரசிகர்கள் மற்றும் ரசிகர்கள் குடும்பத்தினர் வாக்குகள் சேர்த்து 10% வாக்குகளை பெற வாய்ப்புள்ளது. 10 வருடங்களுக்கும் மேலாக போராடி சீமான் பெற்ற வாக்குகளை விஜய் இந்த தேர்தலில் பெறுவார்.

திமுகவிற்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் அப்படியே கிடைத்துவிடும் என்பதாலும், திமுக எதிரான வாக்குகள் பிரிந்து செல்வதாலும் திமுக வெற்றி பெற்றுவிடும். பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக ஒரு வலிமையானக் கூட்டணி அமைந்தால் ஓரளவு திமுகவுடன் மோதி பார்க்கலாம், வெற்றி பெறலாம்.

2026ல் அதிமுக - பாஜக சேருமா என்ற கேள்விக்கு, அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். திமுகவினர் முதலமைச்சர் வேட்பாளர் உதயநிதி என கூறியும், தேர்தலை சந்திக்கவும் வாய்ப்புள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பொறுப்பு முதலமைச்சராகவே செயல்பட்டு வருகிறார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராக வாய்ப்புள்ளது" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.