சென்னை: உலக இருதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மெட்ராஸ் பார் அசோஷியேஷன் மற்றும் பில்ரோத் மருத்துவமனை நிர்வாகம் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இருதய மருத்துவ முகாம் இன்று நடத்தப்பட்டது.
இந்த முகாமை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் இன்று துவங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமை பில்ரோத் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மெட்ராஸ் பார் அசோசியசன் தலைவர் பாஸ்கர், செயலாளர் திருவேங்கடம் மற்றும் ரவுண்ட் டேபிள் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமா? சட்ட வல்லுநர்கள் கூறுவது என்ன? -
இந்த மருத்துவ முகாமில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பலரும் கலந்து கொண்டு பயனடைந்தனர். நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் மன அழுத்தம், இதய பாதிப்புகளை தடுக்கவும், அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறியறிவும் இந்த முகாம் உதவிகரமாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த மருத்துவ முகாம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 நாட்கள் நடத்தப்பட உள்ளது. இந்த இருதய நோய் கண்டறியும் மருத்துவ முகாமில் சிறப்பு அம்சமாக ஒரு குடும்பத்தில் இருவர் பயணடையும் வகையில் பரிசோதனைக்கான அட்டை வழங்கப்பட்டது. அந்த அட்டையை பயன்படுத்தி இருதய நோய் தொடர்பாக சிகிச்சை பெற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்