ETV Bharat / state

ரயில் நிலையங்களில் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள்! - Tirunelveli special train - TIRUNELVELI SPECIAL TRAIN

special arrangement for train passengers: பண்டிகை கால கூட்ட நெரிசலைச் சமாளிக்க மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

ரயில் நிலையங்களில் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 10:59 PM IST

மதுரை: மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. புனித வெள்ளி பண்டிகையை அடுத்த தொடர் விடுமுறை காரணமாக ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்தக் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த சிறப்பு ரயில்களிலும் பயணிகள் முழுமையாக முன்பதிவு செய்துள்ளார்கள்.

குறிப்பாக மார்ச் 22, 25, 28, 31 ஆகிய நாட்களில் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்ட நெரிசலால் பயணிகளுக்கு எந்தவித வசதிக்குறைவும் ஏற்படக்கூடாது என உறுதி செய்ய ரயில்வே நிர்வாகம் விரும்புகிறது. அதற்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நடைமேடைகள், பயண சீட்டு பதிவு அலுவலகங்கள், பயணிகள் காத்திருக்கும் பகுதி ஆகியவற்றில் பயணிகள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் வர்த்தக பிரிவு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில் நிலைய வெளி வளாகப் பகுதியில் வாகன நெரிசல் மற்றும் பயணிகள் வருகை ஆகியவற்றையும் ஒழுங்குபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் உட்பட ரயில்கள் இயக்கம் குறித்து ஒலிபெருக்கி அறிவிப்பு, தகவல் நிலையம் முன்பு அறிவிப்பு பலகை வைப்பது போன்ற ஏற்பாடு செய்யப்படவுள்ளது. குடிநீர், உணவு, குறைந்த விலை உணவு, பேட்டரி கார், சக்கர நாற்காலிகள் ஆகியவையையும் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ரயில் பெட்டிகளில் சுத்தம், சுகாதாரம் பேணுதல் மற்றும் போதியளவு நீர் பிடிப்பது போன்றவற்றையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி ரயில் நிலையங்களில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர்கள், வர்த்தக ஆய்வாளர்கள், ரயில் பெட்டி பராமரிப்பு பொறியாளர்கள் ஆகியோரை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வத்சவா சிறப்பு கண்காணிப்பாளர்களாக நியமித்துள்ளார்.

இதையும் படிங்க: சி.விஜயபாஸ்கர் வீட்டில் நிறைவடைந்த ED சோதனை.."பாஜக அழுத்தம் என்பதை மறுக்க முடியாது" - விஜயபாஸ்கர் தந்தை! - ED Raid In Vijayabaskar House

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.