ETV Bharat / state

பஹ்ரைனில் இருந்து விடுதலையான 28 தமிழக மீனவர்கள்.. முதலமைச்சருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்! - சபாநாயகர் அப்பாவு

பஹ்ரைன் நாட்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள 28 தமிழக மீனவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்
சபாநாயகர் மு.அப்பாவு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2024, 4:08 PM IST

சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள் பஹ்ரைன் நாட்டின் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு, நேற்று (டிச.10) விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசு செலவிலே அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று சட்டசபை சபாநாயகர் அப்பாவு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதி, இடிந்தகரை பகுதியைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழில் செய்வதற்காக சென்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, பஹ்ரைன் நாட்டின் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பஹ்ரைன் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து நான், தங்களின் மேலான கவனத்திற்கு கடிதம் மூலமாக கொண்டுவந்தேன். அதற்கு, தாங்களும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு D.O. Letter No.2995/CMO/2024, dated 26.9.2024 கடிதம் எழுதினீர்கள்.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத் தொகைத் திட்டத்தில் இடஒதுக்கீட்டு முறை; அமைச்சர் சொன்ன தகவல்!

அதன் அடிப்படையில், இந்திய அரசின் வெளியுறவுத் துறை மூலமாக பஹ்ரைன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, 28 மீனவர்களின் தண்டனை காலம் 6 மாதங்களில் இருந்து 3 மாதங்களாக குறைக்கப்பட்டது. தற்போது, மேற்படி மீனவர்களின் தண்டனை காலம் நேற்றுடன் (10.12.2024) முடிவடைந்து, பஹ்ரைன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

ஆகவே, மேற்படி மீனவர்கள் பஹ்ரைனில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவதற்கான விமானக் கட்டணம் உட்பட அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டு, அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு ஆவணம் செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.