ETV Bharat / state

14 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கிய ஒன்றிய அரசு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை ஏன் வஞ்சிக்கிறது? - அப்பாவு கேள்வி

14 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கிய ஒன்றிய அரசு தமிழகம், கேரள உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்காமல் வஞ்சிப்பது ஏன் என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவை தலைவர் அப்பாவு (கோப்புப்படம்)
சட்டப்பேரவை தலைவர் அப்பாவு (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 11 hours ago

திருநெல்வேலி: அக்டோபர் மாதம் இந்திய அளவில் 14 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கிய ஒன்றிய அரசு தமிழகம், கேரள உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்காமல் வஞ்சிப்பது ஏன் என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லையில் தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வருகை தந்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை பாதிப்புகளை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய குழுவினர் வந்து பார்வையிட்டனர். ஆனால், இதுவரை எந்த நிதியும் வழங்கப்படவில்லை எனக்கூறினார்.

மேலும், அக்டோபர் 1ம் தேதி இந்திய அளவில் 14 மாநிலங்களுக்கு புயல், வெள்ளம் பாதிக்கப்பட்டது தொடர்பாக தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்கப்பட்டது. குஜராத் மாநிலத்திற்கு 600 கோடி ரூபாயும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 1,492 கோடி ரூபாயும், ஆந்திராவிற்கு 1,200 கோடி ரூபாயையும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: மெத்தபெட்டமைனை போதை தடுப்பு காவலர்களே சப்ளை செய்த கொடூரம்! சிக்கியது எப்படி?

ஆனால், தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை. தமிழகம்ம், கேரளா தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை, மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை, அனைவருக்கும் கல்வித் திட்டத்திலும் இதுவரை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை, தமிழகத்தை சேர்ந்தவர் தான் நிதி அமைச்சராக இருக்கிறார்.

இருப்பினும், தொடர்ந்து தமிழகத்தை ஏன் வஞ்சிக்கின்றனர் என செய்தியாளர்கள் தான் அவர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும். தமிழகத்தில் தற்போது ஃபெஞ்சல் புயல் காரணமாக மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஒன்றிய அரசு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என அப்பாவு தெரிவித்தார்.

கடந்த அக்டோபரில் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதி அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, அதில் மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கியது. அதற்கு அப்போது நன்றி தெரிவித்திருந்த முதல்வர் ஸ்டாலின், "தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால், இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.