ETV Bharat / state

ஜூன் 24-ல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு! - TN Assembly - TN ASSEMBLY

TN Legislative Assembly Meeting: தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாத கூட்டத்தொடர் வரும் ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

Speaker Appavu
சபாநாயகர் அப்பாவு (Credit - ETVBharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 4:01 PM IST

சென்னை: 2024-25 ஆண்டின் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கியது, அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 19ஆம் தேதி 2024-25ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டது. நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் 22ஆம் தேதி வரை நடைபெற்றது.

சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பு (Credit - ETVBharat TamilNadu)

இந்நிலையில், மக்களவை தேர்தலையொட்டி, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தாமல் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றுடன் திரும்ப பெறப்பட்டதை அடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, வரும் ஜூன் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு துறை ரீதியான மனியக் கோரிக்கைகள் மீதான விவாத கூட்டத்தொடர் துவங்கும் என தெரிவித்தார்.

மேலும், இந்த கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்றும், எந்தெந்த நாட்களில் எந்தெந்த துறைகள் மீதான விவாதம் நடைபெறும் என்றும், ஜூன் 24ஆம் தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவோ அல்லது 10 நாட்களுக்கு முன்போ அலுவலர் ஆய்வுக் கூட்டம் கூடி முடிவு செய்யப்படும் என்றார்.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுவதால், மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்வது, புதிய ரேஷன் அட்டை வழங்குது உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இந்த முறை மோடி ஆட்சி நீடித்து நிலைக்காது - தமுமுக தலைவர் எம்.ஹச்.ஜவாஹிருல்லா ஆருடம்! - Mmk Leader Mh Jawahirullah About Modi

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.