ETV Bharat / state

“மாணவர்களிடையே கருத்து மோதல்கள் இருப்பது எதார்த்தம்”.. நெல்லை சம்பவம் குறித்து அப்பாவு கருத்து! - speaker appavu

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 6:53 PM IST

Tirunelveli school student fight issue: மாணவர்களிடையே கருத்து மோதல்கள் இருப்பது எதார்த்தம். அதனை சாதிய மோதலாக பார்க்கக்கூடாது என திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களிடையே நடந்த மோதல் குறித்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது, “ சட்டப்பேரவையை நடத்த விடாமல் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரினர். கேள்வி நேரம் முடிந்த பின்னர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர முடியும் என்பதை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிந்தும், அவை நடவடிக்கைகளை நடத்த விடாமல் ஒத்திவைக்க கோரினர்.

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

எதிர்க்கட்சிகளுக்கு அதிக நேரம்: கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துவிட்டு அதிமுக அதில் கலந்து கொள்ளவில்லை. அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர். தமிழக சட்டப்பேரவையில் அதிகப்படியான நேரம் எதிர்க்கட்சிகளுக்கே வழங்கப்படுகிறது. சபை நடக்கும் நேரத்தில் 60 சதவிகிதம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் அவையில் அமர்ந்து பேச நினைக்கவில்லை. கேள்வி நேரம் அனைத்தும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறோம். முதலமைச்சரின் 110 விதியின் கீழ் அறிவிப்புகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது” இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளி மாணவர்களுக்கிடையில் தொடர்ந்து சாதி மோதல் நடந்து வருவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “பெற்றோர்களால் நடத்தி முடிக்கப்படும் திருமணங்களில் அனைவருக்கும் மனம் ஒத்துப்போகும் நிலை உருவாவதில்லை. எனவே, மாணவர்களிடையே கருத்து மோதல்கள் இருப்பது எதார்த்தம். அதனை சாதிய மோதலாக பார்க்கக்கூடாது.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய கருத்துக்கள் 11 இடங்களில் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மக்களவை சபாநாயகர் செய்தது சரியா என்பது தொடர்பான கேள்விக்கு, “எனக்கு இந்தி தெரியாது. அவர் என்ன பேசினார் என்பது எனக்கு தெரியாது. அதனால், அவைக் குறிப்பில் இருந்து நீக்கியது சரியா தவறா என்பது குறித்து விமர்சனம் செய்ய முடியாது” என்றார்.

மாஞ்சோலை விவகாரம் தொடர்பான கேள்விக்கு, “மாஞ்சோலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இது தொடர்பாக அரசு வெளிப்படையான கருத்தை சொல்ல முடியாது. நீதிமன்றத்தில் தங்களது தரப்பு கருத்தை அரசு முறையாக தெரிவிக்கும். 2018 ஆம் ஆண்டு மாஞ்சோலை இருக்குமிடம் வனத்துறைக்கு சொந்தமானது என தமிழக அரசு எழுதிக் கொடுத்தபோது யாரும் அது குறித்து வாய் திறக்கவில்லை” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பள்ளிகளில் சமத்துவ எண்ணங்களை போதிக்க வேண்டும்.. நெல்லை மாணவர்கள் மோதல் விவகாரத்தில் ஈபிஎஸ் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.