மதுரை: கோடை கால விடுமுறையையொட்டி, ரயில்களில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் பயணிகளின் வசதிக்காக சென்னை - நாகர்கோவில் இடையே வாரம் மும்முறை சேவையில் வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள தகவலில், 'சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத், வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06057) சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 28 வரை வெள்ளி, சனி, ஞாயிற்று ஆகிய கிழமைகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06058) குறிப்பிடப்பட்ட அதே வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த சிறப்பு ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை செல்லும் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து மாலை 5.55 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கத்தில் சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்லும் ரயில், மதுரைக்கு காலை 10.56 மணிக்கு வந்து சேருகிறது. இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு விரைவில் துவங்கும்' என தெற்கு ரயில்வே அதில் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: "மு.க.ஸ்டாலின் நடிப்பை பார்த்தால் நடிகர் திலகமே மயங்கியிருப்பார்" - கோவையில் முதலமைச்சரை விளாசிய ஈபிஎஸ்! - Lok Sabha Election 2024