ETV Bharat / state

கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க 28 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு! - Southern railway

Madurai Railway Division: விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காகவும், பயணிகளின் வசதி கருதியும் மதுரை ரயில்வே கோட்டத்தில் 28 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 10:55 AM IST

மதுரை: விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காகவும், பயணிகளின் வசதி கருதியும் மதுரை ரயில்வே கோட்டத்தில் 28 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. .

அதன்படி, ஏப்ரல் 8 முதல் ஜூன் 24 வரை காச்சிகுடா (தெலங்கானா) - மதுரை வாராந்திர சிறப்பு ரயிலும் (வண்டி எண்: 07191), ஏப்ரல் 10 முதல் ஜூன் 26 வரை மதுரை - கச்சக்குடா வாராந்திர சிறப்பு ரயிலும் (07192), மே 6 முதல் ஜூன் 24 வரை ஓஹா (குஜராத்)- மதுரை வாராந்திர சிறப்பு ரயிலும் (09520), மே 19 ஜூன் 28 வரை மதுரை - ஓஹா வாராந்திர சிறப்பு ரயிலும் (09519), ஏப்ரல் 7 முதல் மே 26 வரை திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர ரயிலும் (06030), ஏப்ரல் 8 முதல் மே 27 வரை மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர ரயிலும் (06029),

ஏப்ரல் 11 முதல் மே 30 வரை மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர ரயிலும் (06070), ஏப்ரல் 12 முதல் மே 31 வரை தாம்பரம் - திருநெல்வேலி வாராந்திர ரயிலும் (06069), ஏப்ரல் 6 முதல் ஜூன் 29 வரை ஹூப்பாளி (கர்நாடகா) - ராமேஸ்வரம் வாராந்திர ரயிலும் (07355), ஏப்ரல் ஏழு முதல் ஜூன் 30 வரை ஹூப்பாளி - ராமேஸ்வரம் வாராந்திர ரயிலும் (07356), ஏப்ரல் 1 முதல் மே 27 வரை மைசூர் - மானாமதுரை ரயிலும் (06237), ஏப்ரல் 2 முதல் மே 28 வரை மானாமதுரை - மைசூர் வாராந்திர ரயிலும் (06238),

ஏப்ரல் 5 முதல் ஜூன் 28 வரை காச்சிகுடா - நாகர்கோவில் வாராந்திர ரயிலும் (07435), ஏப்ரல் ஏழு முதல் ஜூன் 30 வரை நாகர்கோவில் - கச்சக்குடா வாராந்திர ரயிலும் (07436), மே 5 முதல் மே 26 வரை நாகர்கோவில் தாம்பரம் வாராந்திர ரயிலும் (06012), மே 6 முதல் மே 27 வரை தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர ரயிலும் (06011), மே 2 முதல் ஜூன் 27 வரை சென்னை - நாகர்கோவில் வாராந்திர வந்தே பாரத் ரயிலும் (06067), நாகர்கோவில் - சென்னை வாராந்திர வந்தே பாரத் ரயிலும் (06068),

மே 3 முதல் ஜூன் 30 வரை சென்னை - நாகர்கோவில் வாரம் மும்முறை சேவை வந்தே பாரத் ரயிலும் (06057), நாகர்கோவில் - சென்னை வாரம் மும்முறை சேவை வந்தே பாரத் ரயிலும் (06058), ஜூன் 27 வரை செகந்திராபாத் - ராமநாதபுரம் வாராந்திர ரயிலும் (07695), ஜூன் 28 வரை ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர ரயிலும் (07696) இயக்கப்பட்டு வருகின்றன.

கோடை விடுமுறை சிறப்பு ரயில்கள்: மத்திய பிரதேசம் ஜபல்பூர் - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (02122) ஏப்ரல் 18 முதல் ஜூலை 26 வரையும், மதுரை - ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (02121) ஏப்ரல் 20 முதல் ஜூலை 27 வரையும், திருநெல்வேலி - பெங்களூர் எலகங்கா வாராந்திர சிறப்பு ரயில் (06045) மே 22 முதல் ஜூன் 12 வரையும், எலகங்கா (கர்நாடகா) - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06046) மே 23 முதல் ஜூன் 13 வரையும்,

ராஜபாளையம், தென்காசி, புனலூர் வழியாக தாம்பரம் - கொச்சுவேலி (கேரளா) வாரம் இருமுறை சேவை சிறப்பு ரயில் (06035) மே 16 முதல் ஜூன் 29 வரையும், கொச்சுவேலி - தாம்பரம் வாரம் இருமுறை சேவை சிறப்பு ரயில் (06036) மே 17 முதல் ஜூன் 30 வரையும் இயக்கப்பட்டு வருகின்றன என மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கொப்புடையம்மன் கோயில் நகை காணாமல் போன வழக்கு; அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி! - Temple Jwells Theft

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.