சென்னை: சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4.3 கி.மீ தொலைவுக்கு 4 ஆவது புதிய ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக, கடற்கரை முதல் சிந்தாதிரிப்பேட்டை வரையிலான ரயில் சேவை கடந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்தது.
இதனால் சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை நேரடி ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ரயில் வழித்தடங்களில் முக்கிய கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் இருப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
MRTS EMU train services between Chennai Beach and Velachery will resume from October 29.10.2024 (Tomorrow).
— Southern Railway (@GMSRailway) October 28, 2024
Passengers, kindly take note.#SouthernRailway pic.twitter.com/JUT6kwc5g8
இதற்கிடையே சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை நேரடி ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரை ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. தொடர்ந்து, சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே மட்டும் ரயில் சேவை இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
இதையும் படிங்க: "200 தொகுதிகளில் வெல்ல வேண்டும்" - 2026 க்கு டார்கெட் ஃபிக்ஸ் செய்த ஸ்டாலின்.
இந்நிலையில் எழும்பூர் - கடற்கரை 4வது பாதைக்கான பணிகளை முடிவடைந்தாக கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டிருந்தத நிலையில் கடற்கரை - வேளச்சேரி இடையே மீண்டும் ரயில் சேவை துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சேவை துவங்கவில்லை.
இந்நிலையில் நாளை முதல் மீண்டும் சென்னை கடற்கரை - வேளச்சேரி ரயில்கள் சேவை துவங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதில் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு 45 ரயில்களும், மறுமார்க்கத்தில் 45 ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்