சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் யார்டு மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த மாதம் முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த பணிகள் ஆகஸ்ட் 14ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 4 நாட்களுக்கு புறநகர் ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 15 முதல் 18 ஆம் தேதி வரை 55 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விழுப்புரம் - தாம்பரம், விழுப்புரம் - மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர் - சென்னை கடற்கரை, பாண்டிச்சேரி - சென்னை எழும்பூர், சென்னை எழும்பூர் - பாண்டிச்சேரி, சென்னை கடற்கரை - மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர் - விழுப்புரம் ஆகிய ரயில்கள் ஆகஸ்ட் 15 முதல் 18 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரம் - விழுப்புரம் வழியாக செல்லும் ரயில் மட்டும் ஆகஸ்ட் 15 முதல் 17 வரை 3 நாட்கள் மட்டுமே ரத்து செய்யப்படுகிறது எனவும் தெற்கு ரயுில்வே தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்