மதுரை: சென்னை - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் (Vande Bharat) சிறப்பு ரயிலை, வாரம் நான்கு முறை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி ஜூலை 11, 12, 13, 14, 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
அந்த வகையில், சென்னையில் இருந்து நாகர்கோவில் கோயில் செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067), சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மேற்குறிப்பிட்ட நாட்களில் காலை 05.00 மணிக்கு புறப்பட்டு, மதியம் 01.50 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
அதேபோல், மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (06068), நாகர்கோவிலில் இருந்து குறிப்பிடப்பட்ட அதே வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 02.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.00 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
#VandeBharat Special Trains (4 days a week) is to be operated between #Chennai Egmore - #Nagercoil sector to clear extra rush of traffic. Advance Reservation is open. Passenger, kindly take note.#VandeBharatExpress #SpecialTrain #ChennaiEgmore #RailwayUpdate #SouthernRailway pic.twitter.com/iwAuqEQ8EF
— Southern Railway (@GMSRailway) July 3, 2024
இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்லும்போது மதுரைக்கு காலை 10.37 மணிக்கு வந்து செல்கிறது. மறுமார்க்கமாக நாகர்கோவில் இருந்து சென்னை செல்லும்போது, மதுரைக்கு மாலை 05.00 மணிக்கு வந்து செல்கிறது.
இதையும் படிங்க: ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி... திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!