சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் இன்று பெய்த கனமழையின் எதிரொலியால், பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே மழைநீர் தேங்கியுள்ளதால், 4 விரைவு ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்கள் ரத்து : திருப்பதி - சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்படும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் (16058) இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - ஈரோடு வரை இயக்கப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22649) இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - திருப்பதி வரை செல்லும் திருப்பதி எக்ஸ்பிரஸ் (16203) இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - மைசூரு வரை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் (16021) இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
The Following Trains are fully cancelled due to heavy rain and consequent water logging over Bridge No.114 between Basin Bridge and Vyasarpadi Railway Stations #SouthernRailway pic.twitter.com/yo1jIoVwqP
— Southern Railway (@GMSRailway) October 15, 2024
இதையும் படிங்க : 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை.. என்னென்ன இயங்கும், இயங்காது?
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்