ETV Bharat / state

சென்னையில் தென்னிந்திய 'திருநங்கை ராணி 2024' அழகி போட்டி; 14 போட்டியாளர்கள் பங்கேற்பு - South Indian Transgender Queen

Born2win social welfare trust நடத்தும் தென்னிந்திய திருநங்கை ராணி 2024 அழகி போட்டியானது அக்டோபர் 3 ஆம் தேதி சென்னை எழும்பூர் மியூசிக் தியேட்டரில் நடைபெறவுள்ளது.

தென்னிந்திய திருநங்கை ராணி 2024 அழகி போட்டி
தென்னிந்திய திருநங்கை ராணி 2024 அழகி போட்டி (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2024, 2:31 PM IST

சென்னை: Born2win social welfare trust நடத்தும் தென்னிந்திய திருநங்கை ராணி 2024 அழகி போட்டி போட்டியானது அக்டோபர் 3 ஆம் தேதி சென்னை எழும்பூர் மியூசிக் தியேட்டரில் மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சென்னை, ஈரோடு, மதுரை, நாமக்கல், காஞ்சிபுரம், கோவை, சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, நெல்லை, திருச்சி, டெல்லி போன்ற பகுதிகளில் இருந்து மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பேட்டி அளித்தனர். அப்போது, திருநங்கை ராகினி பேசுகையில், "திருநங்கைகள் என்றாலே இங்கு பலருக்கும் தவறான பார்வை உள்ளது. அதை மாற்றும் அடிப்படியில் தான் Born2win social welfare trust பல உதவிகளை செய்து வருகிறது. இதன் நோக்கம், திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடாமல் சுயதொழில் ஆரம்பித்து சமூகத்தில் பெரிய அளவில் உயர வேண்டும் என்பதுதான்.

இந்த டிரஸ்ட் மூலமாக திருநங்கைகளுக்கு டிரைவிங், தையல் மற்றும் பல விதமான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கிறோம். இந்த போட்டி எக்மோர் மியூசிக் தியேட்டரில் அக்டோபர் 3 ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளது. இதில் 14 பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர் " என்றார்.

இதையும் படிங்க: தமிழக அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தினர் அதிகரிப்பு.. அரசியல் பின்னணி என்ன?

நடுவர் வில்லா கூறுகையில், "தென்னிந்திய திருநங்கை ராணி போட்டி கடந்த 2015 இல் இருந்து 7 முறை நடத்தியுள்ளோம். தற்போது 8வது முறையாக இந்த வருடம் மிகப்பெரிய அளவில் நடத்தவுள்ளோம். ஆண்கள், பெண்கள் மட்டும் அழகி, அழகன் போட்டியில் கலந்து கொள்கின்றனர். திருநங்கைகள் அழகி போட்டி பெரும்பாலும் மக்களிடத்தில் பேசப்படுவதில்லை.

தனியார் நிறுவனங்கள் தான் தற்போது உதவிகள் வழங்கி வருகிறது. தமிழக அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தற்போது தமிழக அரசு உறுதுணையாக உள்ளது . திராவிட முன்னேற்றக் கழகம் மேலும், திருநங்கைகளுக்கென்று தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

கல்விக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் தான் நாங்கள் இட ஒதுக்கீடு கேட்டுள்ளோம். எல்லா துறைகளிலும் ஒரு திருநங்கையை மக்கள் பிரதிநிதியாக வைக்க வேண்டும். மேலும், துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு Born 2 win social welfare Trust சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.