ETV Bharat / state

தொழிலதிபர் கௌதம் அதானி சென்னை வருகை.. காரணம் என்ன? - GAUTAM ADANI in CHENNAI - GAUTAM ADANI IN CHENNAI

Gautam Adani: இந்திய பெரும் தொழிலதிபர்களுள் ஒருவரான கௌதம் அதானி அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்துள்ளார்.

கெளதம் அதானி
கெளதம் அதானி (Credits - Gautam Adani X page and ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 7:45 PM IST

சென்னை: இந்திய பெரும் தொழிலதிபர்களுள் ஒருவரான கௌதம் அதானி அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்துள்ளார். கௌதம் அதானியின் சென்னை வருகை குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

மேலும், தமிழ்நாட்டில் முதலீடுகள் தொடர்பான ஆலோசனைகள் நடத்த கௌதம் அதானி சென்னை வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதானி குழுமம் தமிழ்நாட்டில் பல கோடிக்கு முதலீடு செய்வதற்காக ஒப்பந்தங்கள் செய்திருந்தது.

இந்நிலையில், கௌதம் அதானி சென்னை வந்திருப்பதால் பெரிய அளவில் தொழில் முதலீடுகள் செய்யும் திட்டம் குறித்து தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்த வந்திருக்கலாம் எனவும், தமிழ்நாட்டில் இரண்டு பெரிய தொழிற்சாலைகளை அதானி குழுமம் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இதன் காரணமாகவும் அவர் சென்னையில் ஆலோசனை நடத்த வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நாளை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு.. பாதுகாப்பு முன்னேற்பாடுகள் என்ன? - Vikravandi By election

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.