ETV Bharat / state

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி; முந்தும் நவாஸ் கனி.. ஓ.பன்னீர்செல்வம் நிலை என்ன? - Lok Sabha Election Results 2024

Ramanathapuram Election Results 2024 Live Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்தியா முழுவதும் எந்த தொகுதியில் எந்த வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார் என்ற தகவல்களை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது ஈடிவி பாரத்.

Vote Count
வாக்கு எண்ணும் மையம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 4, 2024, 10:39 AM IST

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது. முன்னதாக, இங்கு திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லிக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அதிமுக சார்பில் ஜெயபெருமாள், பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திர பிரியா ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

ராமநாதபுரம் தொகுதியில் வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில், திமுக கூட்டணி நவாஸ் கனி காலை 10.56 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி நவாஸ் கனி 12322 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகளில் 11.57 மணி நிலவரப்படி, முன்னிலை வகித்த திமுக வேட்பாளர் நவாஸ் கனி, 77,317 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக கூட்டணி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 41128 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ராமநாதபுரம் தொகுதி மூன்றாம் சுற்று முடிவு

வ.எண்கட்சி பெயர் பெற்ற வாக்குகள்
1.திமுக கூட்டணி (நவாஸ் கனி)77,317
2.பாஜக கூட்டணி (ஓ.பன்னீர்செல்வம்)41128
3.அதிமுக (ஜெயபெருமாள்)17203
4.நாதக (சந்திர பிரபா ஜெயபால்)13302

இதில், திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி 36,189 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மதியம் 12.45 மணி நிலவரப்படி, திமுக நவாஸ் கனி 53, 392 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

வ.எண்கட்சி பெயர் பெற்ற வாக்குகள்
1.திமுக கூட்டணி (நவாஸ் கனி)11,4618
2.பாஜக கூட்டணி (ஓ.பன்னீர்செல்வம்)61,1226
3.அதிமுக (ஜெயபெருமாள்)28,118
4.நாதக (சந்திர பிரபா ஜெயபால்)19,551

இந்நிலையில், ராமநாதபுரத்தில் காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 8501 எண்ணிக்கையிலான தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணும் பணி துவங்கிய நிலையில் கையெழுத்துக்கள் இல்லாத காரணத்தால் 30 சதவீத தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து வாக்கு எந்திரங்களில் பதியப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழலில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி 18,517 வாக்குகளுடன் முன்னிலையில் இருந்து வருகிறார். அவரை தொடர்ந்து பாஜக ஆதரவு வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் 11,745 வாக்குகளில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியானது அறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி(தனி), திருவாடானை,ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கியுள்ளது. தற்போதைய மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 16,06,014. இவர்களில் ஆண் வாக்காளர்கள் - 7,96,989, பெண் வாக்காளர்கள் - 8,08,.942 மற்றும் இதர வாக்காளர்கள் - 83. இந்த தேர்தலில் இங்கு மொத்தம் 68.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது.

இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024: திருப்பூரில் சிபிஐ வேட்பாளர் சுப்பராயன் முன்னிலை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.