ETV Bharat / state

தாம்பரம் ரயில்வே கேன்டீன் உரிமையாளருக்கு சம்மன்? ரூ.4 கோடி சிக்கிய விவகாரத்தில் அடுத்த நகர்வு! - four crore seizure case

Four Crore Seizure Case: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தாம்பரம் ரயில்வே கேன்டீன் உரிமையாளருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்
பறிமுதல் செய்யப்பட்ட பணம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 6:22 PM IST

சென்னை: கடந்த மார்ச் மாதம் தாம்பரம் ரயில் நிலையத்தில் மூன்று நபர்களிடமிருந்து ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது பாஜக நிர்வாகி நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான பணம் எனவும், சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து கைமாறி தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்படுவதாகவும் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் வாக்குமூலம் அளித்தனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சுமார் ஒரு மாத காலமாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதில் குற்றம் சாட்டப்பட்ட நயினார் நாகேந்திரன் உட்பட பாஜக நிர்வாகிகள் 15க்கும் மேற்பட்ட நபர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்த விசாரணையில், பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணம் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடை உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டு கொண்டு வரப்பட்டதாகவும், நகைக்கடை உரிமையாளர் உதவியாளர் ஒருவர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான கீழ்பாக்கம் ஹோட்டலுக்கு கொண்டு வந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வந்தனர். மேலும், நகைக்கடை உரிமையாளரின் உதவியாளர் ஒருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர். தொடர்ச்சியாக இந்த பணம் யாருடையது என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே கேன்டீன் உரிமையாளரிடம் விசாரணை நடத்துவதற்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nad)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஃபார்முலா 4 ரேஸ்க்காக ஸ்பான்ஸரை வற்புறுத்தினோமா? - ஈபிஎஸ்க்கு உதயநிதி கேள்வி! - formula 4 car race in chennai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.