ETV Bharat / state

கருவில் சுமந்த தாய்க்கு கோயில்: 1 கோடி செலவில் கட்டி குடமுழக்கு நடத்திய மகன்கள்! - TEMPLE FOR MOTHER - TEMPLE FOR MOTHER

SONS BUILDS TEMPLE FOR MOTHER: "தாயிற் சிறந்த கோயில் இல்லை" என்பதற்கினங்க சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மகன்கள் தங்களது மறைந்த தாயிற்கு ஒரு கோடி ரூபாய்செலவில் கோயில் கட்டி, குடமுழக்கு நடத்தியுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

மறைந்த தாய் முத்துக்காளி அம்மாளுக்கு நிறுவப்பட்ட ஐம்பொன் சிலை
மறைந்த தாய் முத்துக்காளி அம்மாளுக்கு நிறுவப்பட்ட ஐம்பொன் சிலை (Credit -ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 19, 2024, 10:41 PM IST

சிவகங்கை: பட்டமங்கலம் அருகே உள்ள வெளியாரி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி முத்துக்காளி அம்மாள். இவர்களுக்கு சண்முகநாதன், சரவணன் மற்றும் சந்தோஷ் குமார் என 3 மகன்கள் உள்ளனர்.

தாய்க்கு கட்டப்பட்ட கோயில் (Credit -ETV Bharat TamilNadu)

மூத்த மகன் சண்முகநாதன் புதுக்கோட்டையில் சூடம் தயாரிக்கும் கம்பெனி வைத்து நடத்தி வரும் நிலையில் 2வது மகன் சரவணன் மற்றும் 3வது மகன் சந்தோஷ்குமார் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது தாயார் முத்துக்காளியம்மாள் கஷ்டபட்டு போராடி தனது 3 மகன்களையும் படிக்க வைக்க வைத்துள்ளார்.

இந்நிலையில், தனது மகன்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர் கடந்த 2021ம் ஆண்டு தனது 63 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். தாய் இறந்தது முதல் சோகத்தில் வாழ்ந்து வந்த மகன்கள் தங்கள் தாய் மீது கொண்டுள்ள பாசத்தை வெளிப்படுத்த கருவில் சுமந்து தங்களை கரை சேர்த்த தாய்க்கு பெருமை சேர்க்க சொந்த ஊரில் கோயில் கட்ட முடிவு செய்தனர்.

5 அடி உயரத்தில் தாய்க்கு சிலை: அதற்காக கட்டட நிபுணர்கள், கைவினை கலைஞர்கள் ஆகியோருடன் ஆலோசித்து தாய்க்கு ரூ. 1 கோடி செலவில் கோயில் கட்டினர். இந்த கோயிலில் தங்கத்தால் செய்யப்பட்ட கலசமும், அம்மாவின் மகத்துவத்தை விளக்கும் வகையில் கோயில் கருவறையில் 580 கிலோ எடையில் தாய்க்கு 5 அடி உயர ஐம்பொன் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

யாக சாலைகள் அமைத்து நான்கு கால பூஜைகளுடன் யாக வேள்வி நடத்தி வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வரம் செண்டைமேளம் ஒலிக்க, கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் இருந்து கலசங்கள் கோபுரத்திற்கு கொண்டு சென்று புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் உறவினர்கள் கிராம மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து முத்துக்காளி அம்மாளின் மகன்கள் கூறுகையில், "எங்கள் தாய் மிகவும் கஷ்டப்பட்டு எங்களை படிக்க வைத்தார். கல்லூரிக்கு செல்ல பஸ் டிக்கெட் எடுக்க பசுமாட்டின் பால், தயிரை விற்று பணம் கொடுப்பார். கல்லூரி கட்டணம் செலுத்த கழுத்தில் அணிந்திருந்த தாலியை கூட அடகு வைத்து பணம் கொடுத்தார். அதை நினைத்து பார்க்கும்போது இன்றைக்கும் கண்ணீர் வருகிறது.

அடுத்த தலைமுறைக்கு எங்கள் அம்மா பட்டகஷ்டங்கள் தெரிய வேண்டும் என்பதற்காகவே எங்களின் முதல் கடவுளான அம்மாவுக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது” என்கின்றனர்.

580 கிலோ சிலையை சொந்த ஊரில் நிறுவிய மகன்கள், 'ஸ்ரீமுத்துக்காளி அம்மாள்' என கோயிலுக்கு அம்மாவின் பெயரையே சூட்டியுள்ளனர்.

சினிமா நட்சத்திரங்களுக்கு கோயில் கட்டி கொண்டாடும் இன்றைய தலைமுறையினர் மத்தியில் கருவில் சுமந்த தாய்க்கு பெருமை சேர்க்க கோயில் கட்டிய மகன்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆட்கள் தேர்வு தனியாருக்கு விடப்படுவது ஏன்? - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்! - Minister sivasankar

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.