ETV Bharat / state

காட்டுக்குகள் கிடந்த எலும்புக்கூடு.. தாயுடன் தவறான உறவால் விவசாயி கொலை.. ஈரோட்டில் அதிர்ச்சி - erode illegal affair

erode illegal affair: தாளவாடி அருகே தாயுடன் தவறான உறவில் இருந்து வந்த நபரை மகன் அடித்துக்கொலை செய்து உடலை காட்டுக்குள் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 2:31 PM IST

கொலை செய்யப்பட்ட குமார் மற்றும் கைது செய்யப்பட்ட மூவர்
கொலை செய்யப்பட்ட குமார் மற்றும் கைது செய்யப்பட்ட மூவர் (Credits - ETV Bharat Tamil Nadu)

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டாபுரம் வனப்பகுதியில் கடந்த 26ம் தேதி தலமலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கொரு சாக்கு மூட்டை கிடந்து, அதிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

உடனே இதுகுறித்து தாளவாடி காவல்துறைக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர் அந்த சாக்கு முட்டையை பிரித்துப் பார்த்ததில் உள்ளே மனித எலும்புகள் இருந்தது தெரிய வந்தது.

மனித எலும்பை கைப்பற்றிய காவல் துறையினர் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து, சாக்கு மூட்டையில் கிடந்த மனித எலும்புகள் யாருடையது? யாராவது கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் தாளவாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் கைப்பற்றிய எலும்புகள், கடந்த மே 27ம் தேதி காணாமல் போன தொட்டாபுரம் கிராத்தைச் சேர்ந்த குமாருடையது என்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து குமாரை பற்றி தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் தொட்டாபுரம் நாகமல்லு என்பவர் தலமலை கிராம நிர்வாக அலுவலரிடம் குமாரை கொலை செய்ததாக கூறி சரணடைந்தார். பின்னர் அவரை காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அதே போல் முத்துமணி, மாதேவன் என இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நாகமல்லு அளித்த வாக்கு மூலத்தில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

நாகமல்லு அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது; "நானும் என் அம்மா முத்துமணியும் தொட்டாபுரம் தோட்டத்தில் வசித்து வருகிறோம். எனது தந்தை ராமசாமி மதுக்கடையில் வேலை பார்த்து வருகிறார். எனது தம்பி சங்கர், கோவையில் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார்.

இந்நிலையில், எனது அம்மாவுக்கும் குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக திருமண உறவை மீறிய பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதுபற்றி குமாரை எச்சரித்தோம். ஆனால், தொடர்ந்து அவர்கள் உறவில் இருந்து வந்தனர். கடந்த மே 27ம் தேதி நான் தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு வரும் போது குமாரும், எனது அம்மாவும் தனிமையில் இந்ததை கண்டு ஆத்திரம் அடைந்தேன். குமாரை கயிற்றால் கட்டி வைத்து காலையில் போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தேன். ஆனால், குமார் தொடர்ந்து என்னை தகாத வார்த்தையில் திட்டி கொண்டு இருந்தார்.

ஆத்திரத்தில் அருகில் இருந்த சுத்தியால் தலையில் அடித்தேன். இதில் குமார் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலையை மறைக்க என் பெரியப்பா மகன் மாதேவனை துணைக்கு அழைத்து குமார் உடலை மறைக்க திட்டம் தீட்டினோம்.

வனப்பகுதியில் உடலை வீசிவிட்டால் வனவிலங்குகள் தின்று விடும் என நினைத்து உடலை அடர்ந்த வனப்பகுதியில் வீசி விட்டு வந்து விட்டேம். பின்னர் யாரும் எங்களை கண்டு பிடிக்கவில்லை என நினைத்து கொண்டிருந்தோம்.

ஆனால், கடந்த ஜூன் 26ம் தேதி வனத் துறையினர் ரோந்து பணியில் இருந்த போது எலும்புகளை பார்த்து போலீசாரிடம் தெரிவித்து விசாரணை மேற்கொண்டனர். இனி போலீசாரிடம் மாட்டி விடிவிடுவோம் என நினைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தோம்" எனத் தெரிவித்தார்

திருமணத்தை மீறிய உறவால் இளைஞர் கொலை செய்யபட்ட சம்பவம் தாளவாடி மலைப்பாகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஜாமினில் வெளியே வந்த நபர் வீடு புகுந்து வெட்டிக்கொலை.. 48 மணிநேரத்தில் 2 படுகொலையால் திண்டுக்கல்லில் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.