விருதுநகர்: தாய் பாசத்திற்கு ஈடு இணை ஏது என்பதை உணர்த்தும் வகையில் பாம்பின் வாலில் சிக்கிக் கொண்ட தனது குட்டியை, உயிரைப் பணயம் வைத்துப் போராடி தாய் அணில் மீட்டுள்ளது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
விருதுநகர் பகுதியில் மரத்தில் கூடு கட்டியிருந்த அணிலின் குட்டி தவறுதலாகக் கீழே விழுந்துள்ளது. இதனை அப்பகுதியில் இருந்த பாம்பு ஒன்று வாலில் பிடித்து தனது உணவிற்காகக் குட்டியை எடுத்துச் செல்ல முயன்றுள்ளது. இதனைக்கண்ட தாய் அணில் தனது குட்டியைக் காப்பாற்ற முயற்சித்துள்ளது.
பாம்பு அழுத்தமாக அணில் குட்டியைப் பிடித்திருந்த நிலையில், குட்டியைக் காப்பாற்ற வந்த தாய் அணிலையும் பாம்பு தாக்கியுள்ளது. தாய் அணில் தனது உயிரை துச்சமென மதித்து, பாம்புடன் போராடி தனது அணில் குட்டியைக் காப்பாற்றியது. இதனையடுத்து, குட்டியை எடுத்துக்கொண்டு கூடு கட்டியிருந்த மரத்தின் மீது எடுத்துச் சென்றுள்ளது. தாய்ப்பாசத்திற்கு ஈடு இணை ஏது என்பதைக் குறிக்கும் வகையில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஐ.ஏ.எஸ் ஆவதே எனது லட்சியம்.. 10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற திருநெல்வேலி மாணவி! - 10th Result In Tamil Nadu