ETV Bharat / state

16 வயது சிறுமி கொலை வழக்கு: கணவன் மனைவி உட்பட ஆறு பேர் நீதிமன்ற காவலில் அடைப்பு! - CHENNAI HOUSEMAID MURDER CASE

சென்னை அமைந்தகரையில் 16 வயது சிறுமியை அடித்து கொலை செய்த வழக்கில் கணவன் மனைவி உட்பட ஆறு பேரை நவம்பர் 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2024, 7:39 AM IST

சென்னை: சென்னை அமைந்தகரை மேத்தா நகர் சதாசிவ மேத்தா தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஷ் (35). இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு நாசியா (30) என்பவருடன் திருமணமாகி 6 வயது குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்த நிலையில், நவாஸ் வீட்டில் கடந்த ஓராண்டுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை வீட்டு வேலைக்காக பணியில் அமர்த்தியுள்ளனர். சிறுமி அவரது வீட்டில் தங்கி வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். இத்தகைய சூழலில், வீட்டில் வேலை பார்த்து வந்த சிறுமியை கணவன் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் அடித்து கொடுமைப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், முகமது நவாஸ் தனது வீட்டில் தங்கி வேலைபார்த்த 16 வயது சிறுமி குளியலறையில் இறந்து கிடப்பதாக, தன்னுடைய வழக்கறிஞர் மூலம் கடந்த நவம்பர் 1ஆம் தேதி மாலை அமைந்தகரை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து, முகமது நவாஷ் அவரது மனைவி நாசியா ஆகியோரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வேலை செய்து வந்த சிறுமியை அடித்து துன்புறுத்தி வந்ததும், தீபாவளி தினத்தன்று (அக்.31) அடித்த பொழுது மயக்கமடைந்து உயிரிழந்ததாகவும் பிறகு பாத்ரூமில் போட்டு வீட்டை பூட்டிவிட்டு தாங்கள் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: 16 வயது சிறுமி கொலை; ஊதுபத்தி ஏத்தி நாடகமாடியது அம்பலம்!

மேலும், நவாஸின் நண்பர் லோகேஷ், அவரது மனைவி ஜெயசக்தி, நவாஸின் சகோதரி சீமா அவரது வீட்டில் பணிபுரிந்து வரும் மகேஸ்வரி ஆகியோரும் நவாஸ் வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் சிறுமியை அடித்து சித்திரவதை செய்து துன்புறுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, போலீசார் சம்மந்தப்பட்ட ஆறு நபர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்களும் நவாஸ் வீட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம் வீட்டில் பணியாற்றிய அந்த சிறுமியை அடித்து சித்திரவதை செய்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், ஆறு நபர்கள் மீதும் கொலை வழக்கு உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த நிலையில், வரும் நவம்பர் 16ஆம் தேதி வரை 6 பேரையும் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, போலீசார் ஆறு பேரையும் புழல் சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக போலீசார் காத்து கொண்டிருப்பதாகவும், அதில் சிறுமி பாலியல் பலாத்காரம் ஏதாவது செய்யப்பட்டுள்ளாரா என்ற விவரம் தெரியவரும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.