சிவகங்கை: சிவகங்கை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியிலுள்ள காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் அதிமுக வேட்பாளர் பனங்குடி ஏ.சேவியர் தாஸ்யை விட 2,05,664 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
வ.எண் | வேட்பாளர்கள் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|---|
1. | கார்த்திக் சிதம்பரம் | காங்கிரஸ் | 4,27,677 |
2. | பனங்குடி ஏ.சேவியர் தாஸ் | அதிமுக | 2,22,013 |
3. | தேவராஜ் யாதவ் | பாஜக | 1,95,788 |
4. | எழிலரசி | நாதக | 1,63,412 |
2024 நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக கார்த்தி ப.சிதம்பரம் நிறுத்தப்பட்டார். அதிமுக சார்பில் சேவியர் தாஸ், பாஜக கூட்டணியிலுள்ள இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தேவநாதன் யாதவ் பாஜக தாமரை சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பாக எழிலரசி மைக் சின்னத்திலும் போட்டியிட்டனர்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. குறிப்பாக இத்தொகுதியில் ப.சிதம்பரம் அதிக முறை வெற்றி பெற்றிருப்பதும், அவருக்கு பிறகு அவரது மகன் கார்த்தி ப.சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளதும் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாக பார்க்கப்படுகிறது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக மற்றும் பாஜக கூட்டணியிலுள்ள இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகியவையும் வெயிட்டான வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதால், இந்த முறை சிவகங்கை சீமையை கைப்பற்றுவது எந்தக் கட்சிக்கும் கடும் சவாலாகவே இருக்கும் என்று தெரிகிறது.
2019 தேர்தலில் வென்றது யார்?: 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்தி ப.சிதம்பரம் 5,66,104 வாக்குகளும், அதிமுக கூட்டணியிலிருந்த பாஜக சார்பில் போட்டியிட்ட ஹெச்.ராஜா 2,33,860 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வி.சக்தி பிரியா 72,240 வாக்குகளும் மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட சினேகன் 22,931 வாக்குகளும் பெற்றனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம் 3,32,244 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.