ETV Bharat / state

அன்னபூர்ணா விவகாரம்; சிங்காநல்லூர் பாஜக பிரமுகர் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்! - annapoorna owner issue - ANNAPOORNA OWNER ISSUE

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியான விவகாரத்தில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக, சிங்காநல்லூர் பாஜக மண்டலத் தலைவர் சதீஷை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி மாவட்ட தலைவர் ரமேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சதீஷ், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா சீனிவாசன்
சதீஷ், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா சீனிவாசன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2024, 6:42 PM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவராக செயல்பட்டு வந்த சதீஷ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கோரிய வீடியோ வெளியான விவகாரத்தில், சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பியதாகவும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் பாஜகவினர் சதீஷ் மீது கட்சி தலைமையிடத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோரின் அனுமதி பெற்று, சிங்காநல்லூர் மண்டல தலைவர் சதீஷ் மீது பாஜக மாவட்டத் தலைவர் ரமேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க : பன் + க்ரீம் என புதிய விளம்பரத்தை வெளியிட்ட அன்னபூர்ணா ஹோட்டல்! - annapoorna cream bun add

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை எழுப்பிய நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் இது குறித்து உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்ததாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், வீடியோ வெளியான விவகாரம் குறித்து கட்சியில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பாக மேலும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.