ETV Bharat / state

9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மத்திய அரசு தேர்வு: தமிழக அரசுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு! - PSA FOR SHRESTA Exam Case - PSA FOR SHRESTA EXAM CASE

PSA FOR SHRESTA Exam Case: மத்திய அரசு நடத்தும் SHRESTA தேர்வு குறித்து மாநில மொழிகளில் விழிப்புணர்வு மற்றும் விளம்பரம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்ற மதுரை கிளை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 5:39 PM IST

சென்னை: மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான உயர்தர கல்வியை வழங்கும் நோக்கில் SHRESTA தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பயில தேசிய அளவிலான நுழைவு தேர்வு நடத்தப்படும். அதன் அடிப்படையில் 9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இதற்கான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதன் மூலமாகவே விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இந்த ஆண்டு இந்தியா அளவில் 10,201 பேர் ஒன்பதாம் வகுப்புக்கும், 8,993 பேர் 11ஆம் வகுப்புக்கும் பதிவு செய்துள்ளனர். இதில் பட்டியலின மாணவர்களின் பெற்றோர் பெரும்பாலும் போதுமான கல்வியறிவு அற்றவர்களாக உள்ளதால், தேர்வு தொடர்பான விபரங்கள் அவர்களுக்கு தெரிவதில்லை.

இதனால் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் அல்லது கல்வியறிவு பெற்றவர்களின் பிள்ளைகள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றனர். எனவே இந்த தேர்வு குறித்து அந்தந்த மாநில அரசுகள் மாநில மொழிகளில் விளம்பரம் செய்ய வேண்டும் SHRESTA நுழைவுத் தேர்வு தொடர்பாக அனைத்து ஊடகங்களிலும் பெருமளவில் விளம்பரம்படுத்தி போதுமான கால அவகாசம் வழங்கி தேர்வை நடத்த மத்திய சமூக நலத்துறைக்கும், தமிழக ஆதிதிராவிட நல துறைக்கு உத்தரவிட வேண்டும். இத்தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தி, இத்திட்டத்தின் கீழ் பயன் பெற உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியாக கௌரி அமர்வு, "இது குறித்து விளம்பரப்படுத்தினால் தான் மாணவர்கள் பயன் பெற இயலும். தற்போது இணையம் எளிதாகிவிட்டதால், அதை தவறாக அல்லாமல் ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், தேர்வு குறித்து விளம்பரப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுள் தண்டனை கைதி?: சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.