ETV Bharat / state

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து; பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு - முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு! - Sivakasi factory explosion - SIVAKASI FACTORY EXPLOSION

Sivakasi firecracker factory explosion: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து (CREDITS - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 1:27 PM IST

Updated : Jul 9, 2024, 5:11 PM IST

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் வரும் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 60-க்கும் மேற்பட்ட அறைகளில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் பட்டாசு ஆலை வெடி விபத்து (CREDITS - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், இன்று காலை 9 மணி அளவில் வழக்கம் போல், தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணி மருந்து கலவை அறையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த அறை வெடித்து சிதறியது. அறையில் வேலை பார்த்த மாரியப்பன், முத்துவேல் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் சரோஜா, சங்கரவேல் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக சம்பவ இடத்தில் வருவாய்த்துறை, போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு மீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து எம்.புதுபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு: இதைத்தொடர்ந்து, இவ்விபத்தில் தீக்காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சரோஜா என்ற பெண்மணி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரைத்தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த சங்கரவேல் என்பவரும் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து வெடி விபத்தில் ஏற்கனவே மாரியப்பன், முத்து முருகன், உயிரிழந்த நிலையில் தற்போது சரோஜா, சங்கரவேல் ஆகிய இருவரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து மொத்தமாக பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் மற்றும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவர் பலி! - Sivakasi factory explosion

Last Updated : Jul 9, 2024, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.